பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

விமானம்

படுகின்றன. அவற்றுள் 'நாட்' மிக் 12, ஹெச் எஃப்.24 (HF 24) போன்றவை குறிப்பிடத்தக்க

விமானப்படை விமானங்கள்

வகையினவாகும். இவை ஒலி வேகத்தையும் விஞ்சிச் செல்வனவாகும். தரைப்படை.

(படம் தெளிவாக இல்லை)

கப்பல் படைகளுக்கென தனிவகை பயிற்சி நிலையங்கள் இருப்பது போன்றே விமானப் படை பயிற்சி நிலையங்கள், கல்லூரிகள் தனி வகைப் பயிற்சி தருகின்றன. இந்திய விமானப் படை உலக விமானப் படைகளுள் சிறந்த ஒன்றாகும்.


விமானம் : இன்றைய நவீன வாழ்வின் போக்குவரத்துச் சாதனங்களுல் குறிப்பிடக்தக்க ஒன்றாக விளங்குவது விமானமாகும். பயணம் செய்வதற்கும், பொருள்களைக் கொண்டு செல்வதற்கும் மட்டுமல்லாது நாட்டில் பாதுகாப்புக்கு இன்றியமையாத போர் அரணாகவும் விமானங்கள் விளங்குகின்றன. வானில் பறக்கும் பறவை போன்று தானும் பறக்க வேண்டும் என்ற வேட்கை மனிதனுக்கு நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வந்தது. பறவை போன்று இறக்கைகளைக் கட்டிக் கொண்டு பறக்க முயன்றவர்களும் உண்டு. ஆசைக்கு உரிய வடிவம் தந்து செயல்பட்டவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள் ஆவர். 1903ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் நாள் ரைட் சகோதரர்கள் பிர்ச் மரச்சட்டங்களால் உருவாக்கப்பட்ட விமானமொன்றைச் செய்து பறக்க விட்டனர். இஃது 12 விநாடிகளில் 86 மீட்டர் பறந்தது. இதுவே வானில் பறந்த முதல் விமானம். இவர்களைத் தொடர்ந்து வேறு சிலரும் விமான உருவாக்கத்தில் ஈடுபடலாயினர்.