பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

ஜேம்ஸ் வாட்

பாராட்டியது. ஃபிரெஞ்சு மன்னர் நெப்போலியனும் ரஷ்ய மன்னர் ஜாரும் பரிசலித்துப்

ஜென்னர் முதன்முறையாக அம்மை குத்தும் காட்சி

போற்றினர். உலகமெங்குமுள்ள மருத்துவர்கள் இன்றும் ஜென்னரைப் போற்றுகின்றனர்.

மருத்துவத் துறையில் கருத்தூன்றியவராக இருப்பினும் இசையார்வமும் கவிதையாற்றலும் மிக்கவராக விளங்கினார். பறவைகளைப் பற்றிய ஆய்விலும் இவர் ஆர்வமுடையவராக இருந்தார். இவர் 1828ஆம் ஆண்டில் தம் 74 -ஆம் வயதில் மறைவெய்தினார்.


ஜேம்ஸ் வாட் : நீராவி எஞ்சினை சீர்திருத்தி அமைத்த பெருமைக்குரியவர் ஜேம்ஸ் வாட். இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். 1788ஆம் ஆண்டில் கிரீனாக் எனுமிடத்தில் பிறந்தார்.

இளம் வயதில் ஜேம்ஸ் வாட் கல்வியில் ஆர்வம் குன்றியவராக இருந்தார். எனவே, தச்சராகப் பணிபுரிந்துவந்த இவரது தந்தையாருக்கு உதவியாக இவரும் தச்சுத் தொழில் செய்வதில் ஆர்வமுடையவராக இருந்தார்.

கணிதம் தொடர்பான தச்சுக் கருவிகளைச் செய்து வந்த ஜேம்ஸ் வாட் கணிதத்தில் ஆர்வ மிக்கவரானார். இதனால், கிளாஸ்கோ சென்று நுட்பமான கணிதக் கருவிகளை உருவாக்குவதில் சிறப்புப் பயிற்சி பெற்றார். பின் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் கணிதக் கருவிகள் செய்யும் பிரிவில் பணியில் அமர்ந்தார்.

அங்கு, நியூர்கமன் என்பார் வடிவமைத்திருந்த என்ஜினைப் பழுது பார்க்கும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. குறைந்த செலவில் சிறப்பாக இயங்கக்கூடிய, நடைமுறைக் கேற்ப பயன் தரத்தக்க நீராவி எஞ்சினை வடிவமைத்து இயக்கும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தினார். பின், இறுதியாக அவருக்கு முன் கண்டறியப்பட்ட எஞ்சினை முற்றிலுமாக மாற்றி வடிவமைத்தார். 1766ஆம் ஆண்டில் வாட் தாம் மாற்றியமைத்த புதிய

ஜேம்ஸ் வாட்

எஞ்சினுக்கான காப்புரிமை பெற்றார்.

1774ஆம் ஆண்டில் முந்தைய திருத்தி