பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆக்சைடுகள்

41

உருவாக்குகிறது. ஆக்சிஜன் ஹைட்ரஜனுடன் சேரும்போது நீர் உண்டாகிறது. காற்றிலிருந்தும் ஆக்சிஜன் அதிகமுள்ள கூட்டுப் பொருள்களிலிருந்தும் (சாதாரணமாக பொட்டாசியம் குளோரேட்) ஆக்சிஜனைத் தனியே பிரித்து இரும்புக் குழாய்களில் அடைத்து சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்

ஆக்சிஜனுக்கு எரியும் தன்மை உண்டு. ஆக்சிஜன் கலந்த தீப்பிழம்பைக் கொண்டு இரும்புத் துண்டுகளை இணைக்கவோ அல்லது துண்டிக்கவோ முடியும். ஆக்ஸிஜன்-ஹைட்ரஜன் அல்லது. ஆக்சிஜன்-அசிட்டிலீன் கலவை கடின உலோகங்களை வெட்டவோ அல்லது இணைக்கவோ பயன்படுகின்றன. மூச்சுவிட முடியாமல் திணரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தி மூச்சுத் திணரலைப் போக்கி எளிதாகச் சுவாசிக்கச் செய்யலாம். ஆக்சிஜன் வாயும் குறைவாக உள்ள மலை உச்சிகளுக்குச் செல்வோர் தங்களுடன் ஆக்சிஜன் அடைக்கப்பட்ட சிலிண்டர்களைக் கொண்டு செல்வர். விண்ணிற் செலுத்தப்படும் விண்கோள்களில் ஆக்சிஜன் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. வெடி மருந்துகள் தயாரிக்கவும் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது.

மூச்சுத் திணறலுக்கு ஆக்சிஜன் செலுத்துதல்

நீர்மநிலை ஆக்சிஜன் ராக்கெட்டில் பயன்படுத்தும் எரிபொருள்களில் ஒன்றாக பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

மிகக்குறைந்த அழுத்தத்தில் மின் ஆற்றல் செலுத்தி மூலக்கூறு நிலை ஆக்சிஜன் அணு நிலை ஆக்சிஜனாக மாற்றப்படுகிறது. அணு நிலை ஆக்சிஜன் மிகவும் வினைமிக்கது. அனு நிலை ஆக்சிஜன் மூலக்கூறு ஆக்ஸிஜனுடன் இணைந்து ஓஸோன் (Ozone) என்னும் மூன்றணு ஆக்சிஜன் மூலக்கூறு உருவாகிறது. இந்த ஓஸோன் படலம்தான் சூரிய ஒளியின் சக்தி வாய்ந்த ஒளிக்கதிரை மட்டுப்படுத்தி பூமியில் வாழும் உயிர்ப் பொருட்களை பாதுகாக்கிறது.

ஆக்சைடுகள் : ஒரு தனிமம் ஆக்சிஜனுடன் இணையும்போது ஏற்படும் புதுப் பொருள் ஆக்சைடு எனப்படும். இது ஒரு ஆக்ஸிஜனின் சேர்மமாகும். பெரும்பான்மையான தனிமங்களுடன் ஆக்சிஜன் சேர ஆக்சைடுகள் உருவாகின்றன. நிலவுலகெங்கும் பரவியுள்ள காற்று மண்டலத்தில் நிறைய ஆக்சைடுகள் உள்ளன.

புரோமினையும் மந்த வாயுக்களையும் தவிர பிற தனிமங்கள் அனைத்துக்கும் ஆக்சைடுகள் உண்டு எனக் கண்டறியப்பட்டுள்ளது. தனிமங்களில் பல ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்சைடுகளைத் தருவதுண்டு. பல ஆக்சைடுகள் நீருடன் சேர்ந்து ஹைட்ராக்சைடைதரும்.

பெரும்பான்மையான தனிமங்கள் ஆக்சிஜனுடன் சேர்ந்து நேரடியாக ஆக்சைடை அளிக்கும். ஒருசில தனிமங்களின் ஆக்சைடை மறைமுகமாகத் தயாரிக்க வேண்டும்.

சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட வெப்ப அழுத்தச் சூழ்நிலையில் ஆக்சிஜன் பல தனிமங்களுடன் வினைபுரியும். இதற்கேற்ற ஆற்றல் அதற்கு உண்டு. இதன்மூலம் பல ஆக்சைடுகள் தனிமங்களைக் கொண்டே பெறப்படுகின்றன. இத்தகு ஆக்சைடுகள் தனிமங்களோடு ஆக்சிஜன் சேரும் அளவைப் பொருத்து அமைகிறது. அதற்கேற்ப அவற்றில் பெயர்களும் அமைகின்றன. சான்றாக, கந்தகம் ஆக்சிஜன் எரியும்போது சல்ஃபர் டை யாக்சைடும் சல்ஃபர் ட்ரையாக்சைடும் உருவாகின்றன.

வேறு வழிகளிலும் ஆக்சைடுகள் உருவாக்கப்படுகின்றன. சான்றாக, ஹைட்ராக்சைடுகள்,நைட்ரேட்டுகள் ஆக்சலேட்டுகள், கார்பனேட்டுகள் ஆகியவற்றை வெப்பமூட்டினால் ஆக்சைடுகள் கிடைக்கும்.

ஆக்சைடுகள் அவற்றின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தப்படும். ஒரு ஆக்சைடு நீருடன்