பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

இரும்பு

கள் இவரது ஆசிரியர்களுக்குக்கூட புரியாத புதிராக இருந்தன.

இராமானுஜம்

இவர் சென்னைத் துறைமுக அலுவலகத்தில் எழுத்தர் பணியில் அமர்ந்தார். அப்போதும் இவர் தனது கணித ஆராய்ச்சியை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டேயிருந்தார். தன் ஆய்வுகளைப்பற்றி பல கட்டுரைகள் எழுதினார். அக்கட்டுரைகளை கண்ட கணிதவியல் அறிஞர்கள் திகைப்பும் வியப்பும் அடைந்தனர். இவரது கணிதவியல் புலமையைப் போற்றிய சென்னைப் பல்கலைக்கழகம் இவரது கணித ஆராய்ச்சிக்கு உதவ முன்வந்தது.

புகழ்பெற்ற கணிதவியல் பேராசிரியரான ஹார்டிக்கு இவரது கணித அறிவு எட்டியது. இவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் அவருக்குப் பெரும் வியப்பூட்டியது. மேலும் கணித ஆய்வு செய்வதற்கென இவரை லண்டன் வருமாறு அழைப்பு விடுத்தார். அவரது பொருளாதார நிலையும் சமயச் சூழலும் அவரை முதலில் தயங்கச் செய்தாலும் இறுதியில் லண்டன் செல்லலானார். இங்கிலாந்தில் இருந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது கணிதவியல் புத்தாராய்ச்சிக்குப் பேருக்கம் தந்து உற்சாகப் படுத்தியது. அவரது கணித ஆராய்ச்சியைக் கண்டு வயந்த ‘ராயல் சொசைட்டி' இவரைத் தன் உறுப்பினராக ஆக்கிக் கெளரவித்தது. இச்சிறப்பைப் பெற்ற முதல் இந்தியத் தமிழர் எனும் மாபெரும் சிறப்பையும் பெற்றார்.

இவர் இங்கிலாந்தில் இருந்தபோது அவருக்கு நோய் ஏற்பட்டது. அங்கு இருக்கப் பிடிக்காமல் 1919ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். சிறிது காலத்திற்குள்ளாகவே இறப்பெய்த நேரிட்டது.

இவரது நினைவைப் போற்றும்வகையில் ‘இராமானுஜம் கணிதவியல் ஆய்வு நிலையம்' ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. இதன்மூலம் கணிதவியல் ஆய்வு தொடர்ந்து நடைபெற வழியேற்பட்டது. சென்னையில் அமைந்துள்ள இந்நிறுவனம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பகுதியாக மறைந்த இராமானுஜத்தின் ஆய்வுப் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது.

இரும்பு : இது ஓர் உலோகத் தனிமம் ஆகும். பண்டுதொட்டே மனிதனால் பயன்படுத்தப்பட்டு வரும் தனிமங்களில் இரும்பு மிகவும் முக்கியமானதொன்றாகும். சுமார் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே எகிப்தியர்கள் இரும்பாலான நகைகளை அணிந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. மனித நாகரிகத்தின் முதிர்ச்சிக் காலத்தை 'இரும்புக்காலம்’ என மானிடவியலறிஞர் குறிப்பர். பண்டையக்காலம் முதலே இந்தியரும் சீனரும் அன்றாட வாழ்வில் இரும்பாலான பல பொருட்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

கி.மு. 300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பால் செய்யப்பட்ட பல பொருட்கள் எகிப்தியர்களாலும், சிரியர்களாலும் பயன்படுத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக இந்தியர்கள் இரும்பைப் பிரித்தெடுக்கும் முறையிலும், எஃகு தயாரிப்பிலும் சிறந்து விளங்கினர். டெல்லியில் காணும் அசோகர் இரும்புத்தூண் மற்றும் பூரி கோயில்களில் காணப்படும் இரும்பு இணைப்புகள் துரு எனும் கறை ஏற்றம் இல்லா இரும்புகள் இதற்குரிய சான்றுகளாகும்.

பூமியின் மேற்பரப்பில் அதிக அளவில் கிடைக்கும் உலோகத் தனிமங்களில் இரும்பு நான்காவதாகும். இஃது தரையில் மட்டுமல்லாது நீரிலும் இரத்தத்திலும்கூட இரும்புச் சேர்மங்களாக அமைந்துள்ளன.

எல்லா வகைகளிலும் சிறிதளவு இரும்புத் தனிமம் இருக்கவே செய்யும். முக்கியமான இரும்புத் தாதுக்கள் ஆக்சைடுகளும் கார்பனேட்டுகளும் ஆகும். சாதாரணமாக இரும்பு ஆக்சைடுகள் கரியுடன் கலந்து உலோகம் பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் இரும்பில் ஓரளவு கரியும்