பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பர நாதனின் கலியான வெறி I37

யுண்டு பண்ணியது. இதனிடையே, என் அம்மான் மகனுன சிதம்பரநாதன் வந்து சேர்ந்தான். அவன் என் தந்தையின் உதவியால் பி.ஏ. பாஸ் செய்தவன். மன்னர்குடியில் பிதிரார் ஜித சொத்தை வைத்துக்கொண்டு காலங்கழித்து வருகிருன். முன்னெல்லாம் அவன் வந்தால் இரண்டொரு நாட்களுக் கெல்லாம் திரும்பிப் போய்விடுவான். இம்முறையோ ஒரு மாதத்துக்கு மேலாகியும், அவன் போகும் வழியாகக் காணுேம். இங்கேயே இருந்துவிடத் தீர்மானித்திருக்கி ருனுே என்றுகூட சான் சங்தேகித்தேன். அவன் என்னே விட நாலேந்து வயது பெரியவன். எப்போதும் தலைக் கிறுக் குடனேயே இருப்பான். அதோடு தளர்த்தன். எனினும், நான் என் தாயோடு பிறந்த அம்மான் மகன் என்ற மரியா தையோடேயே அவனிடம் நடந்து வந்தேன், ஆனல் அவன் இதற்கு முன்னெல்லாம் என்னிடம் தெருங்க மாட் டான். ஏதேனும் சக்தர்ப்ப மேற்பட்டாலும், அவன் என் னேப் பார்த்து, "நீ பெரிய இடத்துப் பெண்; அதோடு துரைசாணி. எனக்கு உன்னுேடு பேசக்கூட யோக்கியதை யேது?’ என்று கூறி ஈகைத்துக்கொண்டே போய்விடு வான். அப்பேர்ப்பட்டவன், இத் தடவை என்ளுேடு மிக நெருங்கிப் பேசவும், சதா என்னுடன் இருக்கவும் முயன்று வந்தான். நான் விரும்பா திருக்கையிலேயே எனக்கு ஆவனவற்றைச் செய்து என் மனம் உவக்கும் வகையைப் புரிவதிலேயே கண்ணுங் கருத்துமா யிருந்தான். இதில் எதோ உட்குறிப் பிருக்கிறது என்று உண்ர்ந்தேகுயினும், அதைத் தெரிந்துகொள்ள நான் முயலவில்லை. நான் எப் போதும் போலவே அவனிடம் கடந்து வந்தேன்.

என் பரீசையும் நடந்தேறிவிட்டது. கேள்விப் பேப் பர்கள் எனக்கு எளிதாகவே இருந்தமையால், ஒவ்வொன் அறுக்கும் நன்ருக விடையெழுதியிருந்தேன். எனவே, சான்

10.