பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிலாந்து பிரயாணம் 159

சீமையில் உயர்தரக் கல்வி கற்க என்னே அனுப்புவதற்கு அவரே எல்லா ஏற்பாடுகளையுஞ் செய்யலானர். எனது சிற் 'றப்பாவைப்பற்றி உமக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். அவர் ஹாக்கி பக்தாட்டத்தில் கெட்டிக்காரராதலால், சென்னை பந்தாட்ட கோஷ்டியோடு லண்டனுக்குச் சென் றிருக்கிரு.ர். அத்துடன் மோட்டார் மெக்கானிஸம் கற்றுக் கொள்வது சம்பந்தமாகவும் ஒரு முறை இங்கிலாந்து போயிருக்கிரு.ர். ஆகவே, அவருக்கு லண்டன்மா நகரின் கிலேமை நன்கு தெரியுமாதலால், என் தந்தை அவரை என் லுடன் அனுப்பி ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடியில் என்னேச் சேர்க்கும்படி தெரிவித்தார். -

எனது இங்கிலாந்துப் பிரயாணம் என் தாய்க்குச் சிறி தும் பிடிக்கவில்லை. இருந்தாலும் அதை வெளிக்குக் காட் டிக் கொள்ளாமல் எனக்குப் புத்திமதி கூறி யனுப்பினுள். என் தந்தை எங்களுடன் ரயிலில் பம்பாய் வரை வந்தார். பின்னர், பம்பாய் துறைமுகத்துக்குப் போய், கப்பலேறிப் பிறகு, என் தந்தை மிக வருத்தத்தோடு பிரியா விடை கொண்டு பிரிந்தார் நானும் என் சிற்றப்பாவும் முதல் வகுப்பில் பிரயாணஞ் செய்தோம். நாங்கள் எங்களுக்கு ஏற்ப்டுத்தப்பட்ட முதல் வகுப்பு அறையில் நுழையப் போகும்போது, ஜான் கில்பர்ட் புன்னகையோடு அங்கு தோன்றினன். - -

அவனைக் கண்டதும் எனக்குண்டான ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. ஏன்? இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட அவன் என்னைக் கடற்கரையில் சந்தித்து நெடுநேரம் பேசிவிட்டுச்சென்டுன் அச்சமயம், எனது சீமைப்பிரயா ணத்தைப்பற்றி விசாரித்தானே யொழிய, தானும் லண்ட னுக்கு வரப்போவதாகத் தெரிவிக்கவேயில்லே. அப்படி யிருக்க எதிர்பாராத விதமாக அவனைக் கப்பலில் கண்ட