பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

செய்யலாம். இது நேரே பார்க்கத் தகுந்த சிறந்த காட்சி களுள் ஒன்ருகும். வா! அதை உனக்குக் காட்டுகிறேன்" என்று கூறி யழைத்துச் சென்ருன். நான் ஆச்சரியத்தோடு அவனைப் பின் தொடர்ந்தேன்.

ஒரிடத்தில் அழகான சிறிய கட்டடமொன்று காணப்பட் ட்து. அதன் வாயில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதன் முன்புறத்தில் "Underground (தரையின் கீழ்) என்று எழுதி யிருந்தது. ஜான் அங்கு கற்களால் அழகாக அமைந்திருந்த பாலத்தின் வழியாக என்னே பழைத்துச் சென்ருன். அவ் வழியாகக் கீழே இறங்கியதும் எலக்டிரிக் விளக்குகள் வரிசையாக எரிந்து பிரகாசித்துக் கொண்டிருந்த வழி யொன்று தென்பட்டது. அதன் வழியே சிறிது தாஞ் சென்றதும் டிக்கெட் விற்கு மிடத்தை யடைந்தோம். ஜான் அங்கே வைத்திருந்த பெட்டியின் தொளையில் சில பென்னிகளை வைத்தான். உடனே வேருெரு வழியாக ஒரு டிக்கெட் வெளியே வந்தது. இவ்வாறே இன்னுெரு டிக் கெட்டும் வாங்கிக்கொண்டான். அந்தப் பெட்டியின் மீது இன்ன இன்ன இடங்களுக்கு இதில் டிக்கெட் கிடைக்கும் என்றும், அவ்வவ் விடங்களுக்குக் கூலி இத்தனை பென்னி என்றும் அக்கூலியைப் பெட்டியின் துவாரத்தில் வைக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தது. இவ்வியந்தித்திரன் மூல மாக வன்றி அங்குள்ள குமாஸ்தா (Booking-clerk) விடத் திலும் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்.

டிக்கெட் வாங்கியதும் எதிரே காணப்பட்ட ஒருபால் தொட்டியண்டை ஜான் என்னைக் கூட்டிச் சென்ருன். அதில் "Lift என்று எழுதியிருந்தது. அத்தொட்டியில் நாங் கள் ஏறியதும், அங்கிருக்கும் வேலைக்காரன் தொட் டியின் இருபுறத்துக் கதவுகளையும் அடைத்து, ஒரு யந்திரத்தால்