பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

தில் நாங்கள் நகருக்குத் திரும்பி வந்தோம். கடைசியாக நாங்கள், லண்டன் நகரையே வளம்படுத்தி நிற்கும் தேம்ஸ் நதிக்கரைப் பக்கமாக வந்துகொண்டிருந்தோம். அங்கதி யின் படகுகளும் ஸ்டீம் லான்சுகளும் இங்கு மங்குமாக ஒடிக்கொண்டிருந்தன. கதியின் இரு பக்கங்களில் இருந்த உயர்ந்த மாடங்களும் அடுத்தடுத்துக் கட்டியுள்ள பாலங் களும் அம் மாலேக்காலத்தில் நகரைப் பேரழகு செய்து கின்றன. w

தேம்ஸ் நதியின் கரையில், சுற்றிலும் இரும்புக் கம்பி களால் வளைக்கப்பட்டு, இரு பக்கத்தும் உயர்ந்தோங்கிய பெரிய கோபுரங்களை யுடையதாய், பேரழகு வாய்ந்ததாய் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலெஸ்” என்னும் பார்லி மெண்டு சபைக் கூட்டத்தின் தோற்றம் என் கண்களுக்கு கல்விருந்தா யிருந்தது. - . .ب

நான், தேம்ஸ் நதியின் ரமணியமான அழகிலும் பார்லி மெண்ட் சபைக் கட்டடத்தின் கம்பீரத் தோற்றத்திலும் அறிவைப் பறிகொடுத்துப் பார்த்து வருகையில் என் பக்கத் தமர்ந்து மோட்டாரை ஒட்டியவண்ணம் ஏதேதோ பேசிக் கொண்டு வந்த ஜான் கில்பர்ட் திடீரென்று வெறி பிடித்த வன்போல், வலது கையால் பிடித்திருந்த ஸ்டிரீங்கை விட்டு விட்டு, டார்லிங்' மை டியர் டார்லிங்!! (Darling!! My Dear Darling!!)----···---···········---···· ’ என்று கூறிய வண் ணம் என்னைச் சேர்த்துக் கட்டி முத்த மழை பொழிந் தான். நான் திகைப்பும் வியப்பும் ஒருங்கே எழ ஏதோ கூற முயன்றேன். ஆனல் இதற்குள்..........ஆ எங்கள் மோட்டார் கட்டுக் கடங்காது வளைந்து ஓடியதன் பயனுக எதிரே வந்த மோட்டா ரொன்றில் மோதிக் கவிழ்ந்தது. கில்பர்ட் ஒரு பக்கம் போப் விழுந்தான். நான் ஒரு