பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 இவ்வுலகைத் திரும்பிப் யாரேன்

பாத்திரத்தை யெடுத்து நீரை வாயில் விட முயன்ற ஜகதாம்பாள், எதையோ திடீரெனக் கண்டு மருண்டவள் போல் 'ஐயையோ பல் கூடக் கிட்டி விட்டதே அம்மாமி! * * * * * * * * * * * * * * * * * * * * பேச்சு மூச்சில்லையே?........................என்ன தான் மூர்ச்சை போட்டு விழுந்தாலும், இவ்வளவு செய்தும் இத்துனே நேரமாகவா எழுந்திராமல் இருப்பார்கள்? அதென்னமோ அம்மாமி எனக்கு ஒன்றுமே புரியவில்லை * * * * * * * * * * * * " என்று தடுமாற்றத்தோடு பேசினுள்.

கமலம்மாள் வாயைத் திறக்காமல் அப்படியே உட் கார்ந்த விட்டாள். ருக்மணி என்ன என்ன பல் கிட் டிப் போய் விட்டதா!........ "என்று கேட்டுக் கொண்டே எழுந்து சென்று தன் தாயின் முகத்தையும் கமலம்மாள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்து விழித்து நின்ருள்.

ஜகதாம்பாளின் கடைசி வார்த்தை என்னே மிகவுங் கலக்கிவிட்டதென்றே சொல்லவேண்டும். எனக்கிருந்த உடற் சோர்வும், மயக்கமும் எங்கேயோ பறந்து போய் விட்டன. உணர்ச்சி வசப்பட்ட நான் ஒரே ஆவேசத் தோடு துள்ளி யெழுந் தோடினேன். என் தாயின் மீது விழுந்து அலறினேன். 'அம்மா அம்மா!...* 3. என்று கூவிய வண்ணம் என் தாயைப் புரட்டிப் பார்த் தேன். "அம்மா எழுந்திரேன் பேச்சு மூச்சில்லாமல் கீழே விழுந்துகிடக்கிருயே! என்மேல் உனக்குக் கோபமா........... 娜*台碑罗融然够战 ’ என்று மீண்டும் குழந்தைபோல் வாயில் வந்தவாறு பிதற்றிப் புலம்பினேன்.

கமலம்மாள் மற்றிருவரையும் பார்த்து, ஊஉம்! போச்சு; அவ்வளவுதான்!” என்று கூறிக் கையை விரித் தாள். கலக்கத்தில் அவளது பேச்சு எனக்குப் பரிபாஷை யாகத் தோன்றியது. •