பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

இப்போது எந்த மாப்பிள்ளை இந்தப் பிச்சைக்காரி-அதா தையை வந்து கலியானஞ்செய்துகொள்வான்? கடைசி யில் இவள் அவர்கள் காலிலேதானே வந்து விழவேண்டும்? அவர்கள் ஆதரவைத்தானே இவள் நாடவேண்டும்? இல்லா விட்டால் இவளுக்குப் போக்கிடமேது?-என்ன இருந்தா அம் இத்தறுதலையைச் சிதம்பரநாதன் கலியாணஞ் செய்து கொள்வானென்று நான் நினைக்கவில்லை? அத்தை இறந்து விட்டாளென்ற தந்திச் செய்தியைக் கண்டு கதறியவன் இம்மூதேவி முகத்தில் விழிக்கக்கூடா தென்றுதானே கம்மோடு வர மறுத்துவிட்டான்! அப்பேர்ப்பட்டவனு இவளேக் கலியாணஞ் செய்து கொள்வான்? அவன் மனமும் வெறுத்துப்போக்சு-இவள் கர்வத்தைக் கண்டு என்னதான் பணமிருந்தாலும் படிப்பிருந்தாலும் பெண் குய்ப் பிறந்தவளுக்கு இவ்வளவு அகம்பாவம் உதவாது அம்மா! இவ்வளவு குதித்தாளே அந்த வாழ்வு நிலைத்ததா! ........' என்று நீட்டி பேசிக்கொண்டே போனவள் என் சிற்றப்பாவின் வருகையை யறிந்து திடீரென்று நிறுத்தி விட்டு ஒன்றுக் தெரியாதவள்போல் அவரை எதிர்கொண் டழைக்கப் போய்விட்டாள். அவளைப் பின்பற்றி மற்றவர் களுஞ் சென்றனர். என் சிற்றன்னே இத்தனைநாள் அடக்கி வைத்திருந்த விஷத்தைக் கக்கிவிட்டாள்-வஞ்சத்தைத் தீர்த்துவிட்டாள் என்று அவள் பேசிய தோரணையிலிருந்து தெரிந்துகொண்டேன். இப்பேர்ப்பட்டவளுக்கு நான் கர்ப்ப முற்றிருக்குஞ் செய்தியும், அதேைலயே என் தாய் இறந்தாள் என்ற செய்தியும் தெரிந்தால் என்ன எவ்வாறு அலக்கழித்துப் பேசுவ்ாள்? என்ன செய்வாள்? என்று ஊகித்தபோது என் உடம்பேயன்றி உள்ளமும் நடுங்கியது.

என்னைத் தனியேவிட்டுச் சென்றவர்கள் அப்புறம் யாருமே--என் சிற்றப்பாகூட வந்து பார்க்கவில்லை. இரவு