பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

குறிப்பு நமக்கிடையே ஒருவித தொடர்பை உண்டு பண்ணிக் கொள்வதற்கு எனக்கு எளியதாயிற்று. ஆனல் நான் எதிர் பார்த்தவளவு நீர் இவ்விஷயத்தில் சமர்த்தராக இல்லை. அவ் வாறு சொல்வதால் உமக்கு மனச் சங்கடம் உண்டாகலாம். பாருமே ஒரு முறை இரு முறை தவறினல் ஏதோ தற்செய லாக குறிதவறி விட்டதென்று நினைக்கலாம். நான்கைந்து தடவையும் அவ்வாறே. ஆனல் என்னென்பது நீர் என் எண்ணத்தை நிறைவேற்றி வைத்தால், ஏதோ உம் ஆசையையும் பூர்த்தி செய்து வைக்கலாம் என்று பார்த் தால், ஒன்றும் நடப்பதாகவே காணுேமே இனி உம்மை இவ்விஷயத்தில் நம்பி யிருப்பதில் பயனில்லை யென்றுதான் தோன்றுகிறது. சரி; உம் வேலையைப் பார்த்துக்கொண்டு செல்லும்....இல்லை. நீர் என்னிடம் எதிர் பார்த்தது. கிடைக்கவில்லையென்ற கோபத்தில், வேண்டுமானல், நான் உம்மிடம் இதுவரை சொல்லியிருக்கும் இரகசியங்களே யெல் லாம் வெளியிட்டுக் கொலைபுரிய சதியாலோசனை செய்து, வருவதாக என்மீது குற்றஞ் சாட்டித் தண்டனை விதிக்கச் செய்யும். ஏனென்ருல், நீர் குற்ற இலாகா இன்ஸ்பெக்டர் அன்ருே சுலபமாகக் கேஸை ஜோடிக்கத்தான உமக்குத் தெரியாது?’

சே! சே! அப்படியெல்லாம் சொல்லாதே! கண்ணே ஜகதா கான் என்ன அவ்வளவு கொடியவன உன்மீது. நான் என் உயிரையே வைத்திருக்கிறேனென்பது உனக் கென்ன தெரியும்? நீ என்ன வெறுத்துப் புறக்கணிப்பதா குலும், நான் உன்காலடியில் வீழ்ந்து உயிர் விடுவேனே யன்றி, பழி தீர்த்துக்கொள்ள ஒருபோதும் உன்னைக் கா டிக்கொடுக்கமாட்டேன். இது சத்தியமென்று நீ உறுதிய நம்பு-இனி, உனக்கு இந்த கவலேயே வேண்டாம் அந்தப்