பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

மன்னர்களிலேயே ஹிந்து சமயத்தின், ஹிந்துக்களின் விரோதியாக வர்ணிக்கப்பட்டு வருபவர் அவ்ரங்கஸீப் ஆலம்கீர். அவரது செயற்பாடுகளை வைத்து நோக்கும் போது இக்குற்றச்சாட்டுகள் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது மட்டுமல்ல, திட்டமிட்ட சதிச் செயலாகவும் காணப்படுகிறது.

ஹிந்து சமய விவகாரங்களில் அவர் தலையிட்டதாக ஒரு சிறு சம்பவத்தைக்கூட காணமுடியவில்லை. மாறாக, ஹிந்து சமய வளர்ச்சிக்கு அவர் துணையாக இருந்த எத்தனையோ சம்பவங்கள் அவர் வாழ்க்கை வரலாற்றில் நெடுகக் காணக் கிடக்கின்றன. இந்திய வரலாற்றிலேயே ஹிந்து மதக் கோயில்களுக்கு மிக அதிகமான மானியங்களை அளித்த பெருமை மாமன்னர் அவ்ரங்கஸீப் அவர்களையே சாரும். தன் அரசவைக்கு வந்து சைவ சமயப் பெருமைகளைக் கூறிய தமிழ்கூறு நல்லுலகின் குமர குருபரரைப் பாராட்டி பரிசளித்ததுடன் காசியில் சைவ சமய மடம் கட்டிக் கொள்ள நிலமும் பணமும் கொடுத்தார். தென்னாட்டில் திருப்பனந்தாள் ஆதீனத்துக்குப் பெரும் நிலப்பகுதியை மானியமாக அளித்ததாக கர்ணபரம்பரைச் செய்தி கூறுகிறது. இதுபோல எத்தனையெத்தனையோ.

இதற்குக் காரணம், இஸ்லாமிய நெறி தவறாத ஓர் உண்மை முஸ்லிமாக வாழ்ந்து வந்த அவர், எல்லாச் சமயங்களும் சமய வேதங்களும் இறைவன் அளித்தவையே என நம்புவதோடு பிறசமய வளர்ச்சிக்கு உதவுவதையும் தன் இன்றியமையாக் கடமையாகக் கொண்டு செயல்பட்டவராவார்.

அரசியல் காரணமாக ஹிந்து மன்னர்களோடு போரிட்டிருக்கலாம். எதிரி மன்னர்களை வெற்றி கொண்டிருக்கலாம். அவர்களை அடக்கி, ஒடுக்கி, ஏன் அழித்தும் இருக்கலாம். அது அரசியல் நெறி. ஆனால், ஒரு ஹிந்து மன்னனாக