பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55


இதையே இஸ்லாமிய மார்க்கமும் இறை வணக்கத் தொழுகையின்போது நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங் கை விரல்கள் உட்பட இரு பாதங்களின் விரல்களை பூமியின் மேல் நட்டு, இரு முழங்கால்கள் ஆக எட்டு உடல் உறுப்புகள் தரையில்பட தொழுகை நடத்த வேண்டும் எனப் பணிக்கிறது.

கிருஸ்தவ சமயமும் இதே முறையில் சிறிது வித்தியாசத்துடன். இறை வணக்க முறை ஒரே மாதிரியான முறையையும் போக்கையும் கொண்டிருப்பது, இவை ஒரே மூலத்திலிருந்து கிளைத்தவைகள் என்பதைச் சொல்லாமல் சொல்லுகின்றன.

இந்தியாவின் மிகப் பெரிய சமயமான ‘ஹிந்து’ சமயம் உட்பட உலகத்துப் பெரும் சமயங்கள் அனைத்தும் சாதாரண நிலையில் ஒரு நாளைக்கு ஐவேளை பூஜையையும், அத்துடன் சிறப்புப் பூஜையான நள்ளிரவுப் (நடு ஜாமம்) பூஜையையும் இறை வணக்க நேரங்களகக் கொண்டுள்ளன.

எனினும், இஸ்லாத்தில் இப்படித்தான் இறை வணக்கம் அமைய வேண்டுமென வரன்முறையான, கட்டுக்கோப்போடு கூடிய முறை உண்டு. ஆனால், பிற சமயங்களின் வணக்க, வழிபாட்டு முறைகளில் ஒருபோக்கான முறை இருந்தபோதிலும் அதைக் கடைப்பிடிக்க கடுமையான கட்டுப்பாடு ஏதும் இல்லை என்பதை நடைமுறை வணக்க வழிபாடுகளிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். அதிலும், ஒரு முஸ்லிம் இறைவனை ஒரு நாளைக்கு ஐந்துமுறை குறிப்பிட்ட இடைவெளிகளில், குறித்த நேரங்களில் கட்டாயம் தொழ வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடு கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கு ஆன்மீக அடிப்படையில் மட்டுமல்லாது உளவியல் போக்கிலும் நோக்கிலும் ஒரு மனிதன் இருபத்தி நான்கு