பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87



மக்காவைவிட்டு அண்ணலார் வெளியேறிய எட்டாண்டுகளுக்குப் பின்னர் மக்கா நகரை ஒரு சொட்டு ரத்தமும் சிந்தாமல் பெரும் வெற்றி கொண்டார். மதினா செல்லுமுன் மக்காவில், சிலை வணக்கக் குறைஷிகளால் கொடுக்கப்பட்ட பெருங்கஷ்டமான பதின்மூன்று ஆண்டுகள் உட்பட இருபத்தொராண்டுகளுக்கு மேலாக பெருந் துன்பம் அனுபவித்த பெருமானாரும் பிற முஸ்லிம் தோழர்களும் வெற்றி வீரர்களாக மக்காவிலுள்ள இறையில்லமான ‘காபா’ முன்பாக மாற்றுச் சமயத்தவர்களான மக்காவாசிகள் அனைவரும் குழுமுமாறும் அவர்களோடு பெருமானார் பேச விரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இருபதாண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய நெறியைப் பரப்ப இயலாதவாறு பெருமானாரோடு அடிக்கடி போரிட்டும், பல்வேறு வகைகளில் தாக்குதல் தொடுத்தும், சொத்துகளைச் சேதப்படுத்தியும் அபகரித்தும் பெருங் கொடுமைகளைச் செய்த மக்காவாசிகள் படுமோசமான தோல்வியைத் தழுவிய நிலையில், ஆயிரக்கணக்கான முஸ்லிமல்லாதவர்கள் ‘காபா’ இறையில்லம் முன்பாக கவலையோடும் அச்சத்தோடு குழுமியிருந்தனர். அவர்களைச் சுற்றிலும் இஸ்லாமியப் போர் வீரர்களைக் கொண்ட இராணுவம் சூழ்ந்து நின்றது.

அப்போது மதியத் தொழுகை நேரமான ‘லுஹர்’ நேரம், அப்போது பெருமானார் ‘காபா’ இறையில்லம் மீதேறி தொழுகை அழைப்புக்கான அதான் கூறுமாறு கறுப்பு இனத்தவரான பிலால் (ரலி) அவர்களைப் பணித்தார். அவ ரும் உடனடியாகக் ‘காபா’ இறையில்லம் மீதேறி தொழுகை அழைப்பு விடுக்கலானார்.

“அல்லாஹ் பெரியவன்; அல்லாஹ் பெரியவன்; அல்லாஹ்வைத் தவிர வணங்குதற்குரியவர் வேறு யாருமில்லை,” எனத் தொடங்கும் தொழுகை அழைப்பை