பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100


ஏதென்சில் சாக்ரட்டீஸ் தர்கா

சமீபத்தில் கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகருக்குச் சென்றிருந்தேன். ஒரு காலத்தில் உலகின் தத்துவக் களஞ்சியமாக அறிவுச் சுரங்கமாகத் திகழ்ந்த பகுதி அது. அங்கே புகழ் பெற்ற அக்ரோபொலிஸ் என்ற பழங்காலச் சின்னங்கள் நிறைந்த பகுதியைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்தேன். அப்போது ஏனோ அந்நாட்டின் மாபெரும் சாக்ரட்டீசின் நினைவு வந்தது. சாக்ரட்டீசுக்கு விஷம் கொடுத்துக் கொன்றபோது அடைக்கப்பட்டிருந்த சிறைச் சாலையை பார்க்க இயலுமா என, என்னை அழைத்துச் சென்ற நண்பரைக் கேட்டேன். அவர் ஒரு கிருஸ்தவர்; யுனெஸ்கோ கூரியர் கிரேக்க மொழிப் பதிப்பில் பணியாற்றி வருபவர். அவர் சிரித்தபடி "சாக்ரட்டீஸ் அடைபட்டிருந்த சிறைப் பகுதிக்கு மட்டு மல்ல, அவர் அடக்கமாகியுள்ள தர்காவுக்கும் சென்று உங்கள் இஸ்லாமிய மரபு முறைப்படி 'ஜியாரத்'தும் செய்து வரலாம்” எனக் கூறிச் சிரித்தார். சாக்ரட்டீசுக்கு தர்காவா? அதுவும் இஸ்லாமிய முறைப்படி 'ஜியாரத்தா?' நான் ஏதும் அறியாத நிலையில் பேந்தப் பேந்த விழித்தேன். என் ஐயப்பாடு எதுவாக இருக்க முடியும் என்பதை ஓரளவு ஊகித்துக் கொண்ட நண்பர்,

“ஆட்டோமன் ஆட்சிக்குக் கிரீக் அடிமைப்பட்டிருந்த காலத்தில், இஸ்லாமிய அணுகுமுறையோடு ஆட்டோமன் ஆட்சியாளர்கள் கிரேக்கை ஆண்டு வந்தனர். இஸ்லாமிய மரபுப்படி கிரேக்க மக்களை வழி நடத்த வந்த நபியே சாக்ரட்டீஸ் எனக் கருதி, அவர் புதைக்கப்பட்டிருந்த புதை குழியைச் சுற்றி நாற் சதுர கட்டிடமொன்றை எழுப்பி அதை தர்கா ஆக்கியதோடு, இஸ்லாமிய முறைப்படி, விரும்புவோர் அங்கு சென்று ஜியாரத் செய்யவும் ஏற்பாடு செய்தனர். அன்று முக்கியத்துவமுடையதாக விளங்கிய அத்தர்கா இன்று முக்கியத்துவம் இழந்திருப்பினும் தர்கா