பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

பட்ட சூரியக் கடிகாரம் ஒன்றை வாங்கிக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தார்.

ஊர் நடுவில் நன்கு சூரிய ஒளி படக் கூடிய மைதானத்தில் சூரியக் கடிகாரத்தை வைத்தார். அவ்வூர் மக்கள் அதன் அடியில் விழும் நிழலின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் கணித்தறிந்து, அதற்கேற்ப தங்கள் வேலைகளைத் திட்டமிட்டுச் செம்மையாகச் செய்து முடித்தனர். இதனால் நேரக் குழப்பம் நீங்கியது. எங்கும் சீரொழுங்கோடு அதிகப் பணிகள் நடைபெற்றன. இதனால் வளமும் மகிழ்ச்சியும் பெருகியது. தங்கள் வாழ்வில் நேர ஒழுங்கையும் செழிப்பையும் மகிழ்வையும் கொண்டு வந்த சூரியக் கடிகாரத்தை நன்றியோடு நோக்கினர். அதைக் கொண்டு வந்து நிறுவியவரைப் போற்றிப் புகழ்ந்தனர். தங்களின் வழிகாட்டியாகக் கருதி அவரை வாழ்த்தினர்.

ஒருநாள் சூரியக் கடிகாரத்தைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவர் இறந்து விட்டார். தங்கள் ஊருக்குச் சூரியக் கடிகாரத்தைக் கொண்டு வந்து மக்கள் வாழ்வில் நேர ஒழுங்கும் ஊர்ச் செழுமையும் உருவாகக் காரணமாக இருந்த அந்த நல்லவரின் நினைவை என்றென்றும் போற்றும் முறையில் ஒரு பெரும் நினைவாலயத்தை எழுப்பினர். அந் நினைவாலயத்தின் உள் மைய மண்டபப் பகுதியில் அவரின் நினைவாக தங்களுக்கு நேர ஒழுங்கை யும் வளத்தையும் தரக் காணரமாக இருந்த சூரியக் கடிகாரத்தைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தனர். சூரியக் கடிகாரம் நினைவாலயம் சென்றுவிட்டதால், மைதானத்தில் நிழலைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் நேரத்தை பகுத்து, நேரப்படி பணியாற்ற வழியில்லாமல் போய்விட்டது. மீண்டும் குழப்பம், வேலை மந்தம், வளர்ச்சிக் குறைவு. மக்கள் வாழ்க்கையில் மீண்டும் தேக்க நிலை.

இறையை உணர்த்தியவரே இறைவனாக்கப்பட்டார்

இதே போலத்தான், எந்த நபி உருவிலா ஓரிறையை