பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

படையினரும் செங்கடல் நீரில் தத்தளித்தனர். தனக்கு அழிவு நெருங்கி விட்டதை ஃபிர்அவ்ன் தெளிவாக உணர்ந்தான். தன்னைக் காக்க சர்வ சக்தியுள்ள இறைவனாலேயே இயலும் என்ற உணர்வு நெருப்புப் பொறியாக அவன் உள்ளத்தில் தோன்றி ஜுவாலையாகக் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. "இறைவன் ஒருவன் இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். அந்த இறைவன் என்னைக் காத்து இரட்சிக்க அவனருளை வேண்டுகிறேன்” எனக் கதறியபடி கூறினான். தன் அழிவின் விளிம்பை எட்டிய நிலையில் இறையச்சத்தோடு பூரண இறை நம்பிக்கையுடன் இறைவனை வேண்ட, இறைவனும் அவனுக்கு உதவ முன் வந்தான். 'தன் வாழ்வில் இறுதி நிமிடத்தில் இறையச்சமும் இறை நம்பிக்கையும் கொண்டு இறையுதவியை வேண்டிநின்றதால், ஃபிர்அவ்னின் பூதவுடல் இவ்வுலகுள்ளளவும் அழியாமல் காக்கப்படும். இறை நம்பிக்கையாளர்கட்கு அவ்வுடல் ஒரு சான்றாக இருக்கும்’ என இறைவன் கூறியதோடு அவன் உடல் இதுவரையிலும் அழியாமல் காத்து வரப்படுகிறது. அந்த உடல் இன்றுவரை 'மம்மி'யாக எகிப்து அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இறையச்சம் இறைநம்பிக்கைக்கு ஊற்றுக்கண்

ஒரு நிமிடநேரம் இறையச்சம் கொண்டு இறை நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்குப் பயனாக ஃபிர்அவ்னின் உடல் உலகுள்ளளவும் பாதுகாக்க அருள் செய்த இறைவன், நம் வாழ்நாள் முழுமையும் இறையச்சமும் அழுத்தமான இறை நம்பிக்கையும் கொண்டு, இறைநெறிப் படி வாழ்வோமேயானால், நமக்கு வல்ல அல்லாஹ் எத்தகைய பெரும் பேறுகளையெல்லாம் வழங்கி மகிழ்விப்பான் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இறையச்சத்தோடு கூடிய ஆழ்ந்த இறை நம்பிக்கை, நம் வாழ்க்கை செம்மையாக அமைய, எல்லா வகையிலும்