பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

கிரேக்கர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆரியர்களால் போற்றி வளர்க்கப்பட்ட விக்கிரக ஆராதனை முறை கொஞ்சங் கொஞ்சமாக வடக்கேயிருந்து தெற்கு நோக்கிப் பரவலாயிற்று.

தமிழகம் வந்த உருவ வழிபாட்டு முறை

சங்க காலம் வரை சமயத் தாக்கங்களோ விக்கிரக ஆராதனை முறைகளோ தமிழகத்தில் அழுத்தக் கால் ஊன்றவில்லை. அதனால்தான் சங்க இலக்கியங்களில் கோயில்களைப் பற்றியோ பூசனை, சடங்கு சம்பிரதாயங்களைப் பற்றியோ ஏதும் பேசப்படவில்லை. இறைவனை அனைத்தையும் கடந்து நிற்கும் 'ஏகப் பரம்பொருள்' எனும் பொருளில் 'கடவுள்' என்றும், அனைத்துயிர்க்கும் தலைமையாக இருப்பதால் 'இறைவன்' என்றும் போற்றப்பட்டது.

சங்க காலத்திலேயே இங்கு சமயத்தாக்கங்கள் ஏற்பட, தமிழர்கள் தாங்கள் வாழும் சூழலுக்கேற்ப, கடவுளர்களை உருவாக்கிக் கொள்ள முனைந்தார்கள். அப்படி உருவாக்கப்பட்ட கடவுளர்களே முருகன், மாயோன், சேயோன் எல்லாம். இதுதான் சிலை வணக்கமுறை உருவான வரலாறு.

கிருஸ்தவத்தில் உருவ வழிபாடு புகுந்த வரலாறு

ஹிந்து சமயத்தில் மட்டுமல்ல, கிருஸ்தவ சமயத்திலும் விக்கிரக ஆராதனை முறையைப் புகுத்தியவர்கள் கிரேக்கர்கள்.

கிருஸ்தவ சமயம் கிரேக்க மண்ணில் கால் பதிக்கும் வரை அதில் விக்கிரக ஆராதனை முறை தலை தூக்கவில்லை. கிரேக்கர்கள் கிருஸ்தவர்களாக என்று மாறினார்களோ அன்றே, கிரேக்க மரபுப்படி உருவ வழிப்பாட்டு முறையில்தான் இறைவனைக் காண முடியும் என்று கருதி ஏசுவுக்கும் மரியன்னைக்கும் மற்றும் அவர்களைச் சார்ந்த-