பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131

வர்களுக்கும் உருவம் கற்பித்து வழிபடத் தொடங்கினர். கிரேக்கத்துக்கு அப்பால் இருந்தவர்கள் இச் சிலை வழிபாட்டு முறையை ஏற்கவில்லை. இதனால் போரும் புகைச்சலும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகியது. அப்போதெல்லாம் இஸ்லாம் தனது சகிப்புணர்வையும் சமய நல்லிணக்கப் போக்குகளையும் முற்றாகக் கடைப் பிடித்து, நடுவு நிலை பேணி வந்துள்ளதை வரலாறு நெடுகக் காண முடிகிறது. இந்தச் சிலை வணக்கப் போராட்டம், பைஸாந்தியத்தை லியோ இஸூரியன் எனும் பேரரசன் ஆளும்போது உச்சகட்டத்தை அடைந்தது.

விக்கிரக ஆராதனையை எதிர்த்த பைஸாந்திய
கிருஸ்தவ ஆட்சி

பைஸாந்திய ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் கிருஸ்தவ தேவாலயங்களிலும் மடாலயங்களிலும் யாரும் விக்கிரக ஆராதனையாக சிலை வணக்கம் செய்யக்கூடாது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேவாலயங்களிலும் மடாலயங்களிலுமுள்ள அனைத்து விக்கிரகங்களும் அகற்றப்பட வேண்டும். மறுப்பவர் அரசு தண்டனைக்குள்ளாவார். இதை மீறும் தேவாலயங்களும் மடாலயங்களும் இடித்துத் தரைமட்டமாக்கப்படும். சிலையிலா வணக்க முறையே பைஸாந்திய கிருஸ்தவ ஆட்சியின் இறை வணக்க முறை என அறிவித்தது.

குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சில தேவாலயங்களும் மடாலயங்களும் சிலைகளை அப்புறப்படுத்தி சிலை யிலா வணக்க முறைக்கு வழி வகுத்தன. கிரேக்கக் கிருஸ்தவர்களின் செல்வாக்கு மிக்க சில சர்ச்சுகள் சிலைகளை அப்புறப்படுத்த மறுத்தன. சில, கால தாமதம் செய்து வந்தன. இதனால் கோபமடைந்த மன்னன் லியோ இஸூரியன் தன் படைகளை அனுப்பி சிலை அகற்ற மறுக்கும் தேவாலயங்களையும் மடாலயங்களையும் இடிக்க உத்தரவிட்டான். அவ்வுத்தரவு அவன் படையின-