பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

வெட்டிப் பிழைக்கிறார். மரம் வெட்டும் வேலைக்கு இடையேதான் வக்து தொழுகையை நிறைவேற்றுகிறார். இவர் வருமானத்தில்தான் இவர் சகோதரர் வாழ்கிறார்” என்று பதிலளித்தார் சஹாபி. இதைக் கேட்ட அண்ணலார் அவர்கள் “அவசர அவசரமாக வந்து தொழுகையை அதிலும் பர்ளுத் தொழுகையை மட்டும் நிறைவேற்றிச் செல்கிறாரே அவர்தான் சொர்க்கத்திற்கு முதலில் செல்வார். எந்நேரமும் இறைவணக்கத்தில் ஈடுபட்டிருப்பவர் இவருக்குப் பின்னால்தான் சொர்க்கம் புகுவார்" எனப் பதிலளித்தார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள்.

இதைக் கேட்ட சஹாபி மேலும் குழப்பமடைந்தவராகப் பெருமானாரை நோக்கி “எப்போதும் தொழுது கொண்டிருப்பவரை விட வக்து தொழுகையை மட்டும் அவசர அவசரமாகத் தொழுதுவிட்டுச் செல்பவருக்குச் சொர்க்கத்தில் இவ்வளவு பெரிய சிறப்புக் கிடைக்க முடியுமா?” எனக் கேட்கிறார். கேள்வி கேட்டவரின் உட்கிடக்கையைப் புரிந்து கொண்ட நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மிகப் பொறுமையாகவும் அதே சமயத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடும் விளக்கிக் கூற முனைந்தார் :

“ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் விதித்த கடமைகள் உண்டு. அக் கடமைகளின் நிறைவேற்றத்திற்கிடையே தான் அவன் இறை வணக்கத்தையும் நிறைவேற்றக் கூடியவனாக இருக்கின்றான். இறை வணக்கத்திற்காக மட்டும் நேரத்தைச் செலவு செய்து கடமையை மறந்து விட்டால், அவன் உலகியல் வாழ்வையும் குடும்ப வாழ்வில் இறைவன் விதித்த கடமைகளையும் நிறைவேற்றத் தவறியவனாகி விடுகிறான். ஆகவே, இறைவன் தனக்கென விதித்த கடமைகளைச் செய்து கொண்டு, அதற்கிடையே தொழுகைக் கடமைகளை நிறைவேற்றி வருவதே சிறப்பு. மரம் வெட்டும் வேலைகளுக்கிடையே தொழுகைக் கடமையையும் நிறைவேற்றியவராக, மரம் வெட்டும்