பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

அவர்களை உயர்த்திப் பேசினார் என்பதற்காக அறைந்ததற்கு மிகவும் வருந்துகிறேன் என்று கூறி யூதரிடத்திலே அண்ணலார் வருத்தம் தெரிவித்தார். இதன் மூலம் பிற சமயங்களைப் பழிக்கக் கூடாது, பிற சமயங்களைச் சார்ந்தவர்களை மதிக்க வேண்டும். பிற சமயத்தவர்களின் உணர்வுகளை மதிக்கப் பணிப்பது இஸ்லாத்தின் அடிப்படைப் பண்பு என்பதை நாம் உணர வேண்டும்.

பிற சமயத்தவர் நம்பிக்கைகளை, சமய உணர்வுகளை மதிப்பது ஒரு முஸ்லிம்களின் அடிப்படைப் பண்பு என்பதை அழுத்தமாக உணர்த்தும் ஒரு நிகழ்ச்சி அவுரங்கசீப் ஆலம்கீர் வாழ்க்கையில் நடந்ததாக வரலாறு சாட்சியம் கூறிக் கொண்டுள்ளது.

அவுரங்கஸீப் ஆலம்கீரும் சிவாஜியும் அரசியல் விரோதிகளாவர். அவர்களுக்கிடையே மதத் தகராறு எதுவும் இல்லை. அவுரங்கசீப்பின் ஆதிக்கத்திற்குட்பட்ட மராட்டியப் பகுதியைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க முயன்றவர் சிவாஜி. போரின்போது கைதான சிவாஜி சிறை வைக்கப்பட்டார். அப்போது அவருக்குக் கடுமையான நோய் ஏற்பட்டது. அவர் பின்பற்றி வந்த இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் மதுராவில் இருக்கும் கிருஷ்ணன் கோவிலுக்குச் சில குதிரைகளைத் தானமாகத் தந்தால் தனக்கேற்பட்டுள்ள நோய் போய்விடுமெனவும் அவ்வேண்டுகோளை ஏற்று, அவுரங்கஸீப் மன்னர் நிறைவேற்றித் தர வேண்டுமெனவும் சிறையிலிருந்தவாறே சிவாஜி வேண்டினார். அவுரங்கசீப்புக்கு அத்தகைய நம்பிக்கை அறவே இல்லையென்றாலும் சிவாஜியின் சமய நம்பிக்கையை மதித்து, மதுராவிலுள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு குதிரை வழங்கினார் அவுரங்களஸீப் என்பது வரலாறு. இதிலிருந்து பிற சமயத்தவர் நம்பிக்கைகளுக்கும் சமய உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பது இஸ்லாமியனின் இன்றியமையாக் கடமை என்பது தெளிவு.

அது மட்டுமல்ல, சமயம் கடந்த நிலையிலே பிற மதத்