பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

315

தோற்றங்களுக்காக மட்டும் தேர்வு செய்யாது, நல்ல தமிழ்ப் பயிற்சி பெற்றவர்களையே நிகழ்ச்சி நடத்துநர்களாக அமர்த்த வேண்டும்.

புனிதத்தை ஏற்றினால் இறப்பு நிச்சயம்

இச் சமயத்தில் மற்றொரு உண்மையையும் நாம் உணர்ந்து தெளிய வேண்டும். எந்த ஒரு மொழி மீதாவது புனிதத்தை ஏற்றி, அதைத் தெய்வ நிலைக்கு உயர்த்தினால் அம் மொழியை, அப் புனிதமே இறக்கச் செய்து விடும் என்பது மொழி வரலாறு உணர்த்தும் பேருண்மை.

விவிலிய வேதம் இருந்த காரணத்தால் லத்தீன் மொழி மீது புனிதத்தை ஏற்றினார்கள். காலப்போக்கில் அப் புனித உணர்வே மொழியைத் தனிமைப்படுத்த, இன்று இறந்த மொழிக்கோர் உதாரணமாகி விட்டது. அதே போன்று யூத வேத மொழியாக ஹீப்ரு இருந்ததனால், அதன் மீது புனிதத்தை ஏற்றிப் போற்றினார்கள். காலப்போக்கில் வேதத்துக்கு மட்டும் பயன்படும் மொழியாக உருமாறி அதுவும் வழக்கிழந்த மொழிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. நல்வினைப் பயனாக இரண்டாம் உலகப் போருக்குப்பின் உருவான இஸ்ரேல் நாட்டின் ஆட்சி மொழி, பயிற்சி மொழி என ஆக்கப்பட்டதால் ஆற்றல் மிகு உயிர்ப்பு மொழியாக இன்று பவனி வருகிறது. புனிதத்தை சமஸ்கிருத மொழி மீது ஏற்றியதன் விளைவு இன்று வரை இயங்கா மொழியாகத் தேக்கநிலை பெற்றுள்ளது. அதே போன்று தமிழின் மீது கொண்டுள்ள பற்றாலும் பாசத்தாலும் தெய்வ நிலைக்கு ஒரு சாரரால் உயர்த்தப்பட்டு, பூஜிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதுவே தமிழின் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக அமைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுவது இயல்பே.

தமிழைத் தெய்வமாக்காதீர்!

தெய்வ நிலைக்குத் தமிழை உயர்த்த விழையும்