பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

இறைவன் தந்தருளிய பகுத்தறிவைப் பயன்படுத்தி, ஆராய்ச்சி செய்து, இறைவன் மறை பொருளாக விண்ணிலும் மண்ணிலும் பொதிந்து வைத்துள்ள அனைத்தையும் கண்டறிந்து, அவற்றையெல்லாம் அனுபவித்து மகிழ வேண்டும் என்பது இறைக் கட்டளையாகும்.

"வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தையும் (உங்கள் நன்மைக்காக) தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான். சிந்தித்து ஆராயும் மக்களுக்கு இதில் நிச்சயமாகப் பல படிப்பினைகள் இருக்கின்றன." (45:12:13)

தரைக்கு மேல் உள்ள அனைத்தையும் அனுபவித்த மனிதன் மண்ணைத் தோண்டி உள்ளே இருக்கும் தங்கம் முதலாக நிலக்கரி ஈராக அனைத்தையும் தோண்டியெடுத்து அனுபவிக்கத் தவறவில்லை. மண்ணுக்கடியில் தேங்கி நிற்கும் நீரை மட்டுமா வெளிக் கொணர்ந்தான். பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பாக மண்ணுள் புதையுண்டு போய் மனித, விலங்கு, தாவர உயிரினங்களின் சாராக உருமாறியுள்ள பெட்ரோலையுமல்லவா வெளிக்கொண்டு வந்து, பல்வேறு பொருள்களாக உருமாற்றிப் பயன்படுத்தி வருகிறான். இவைகளை மண்ணுக்குள்ளிலிருந்து மட்டுமா பெறுகிறான். ஆழ்கடலின்னுள்ளிருந்தும் பெட்ரோலையும் பிற உலோகங்களையும் மீன் போன்ற உயிரினங்களையும் வேண்டிய மட்டும் கண்டறிந்து, சேகரித்து, பயன்படுத்தி மகிழ்கிறான். இதற்கெல்லாம் ஆதாரமாக - அடிப்படையாக அமைந்திருப்பது அவனது பகுத்தறிவுச் சிந்தனையேயாகும்.

மண்ணினுள், கடலுள் மட்டும் ஆராய்ச்சி செய்வதோடமையாது விண்ணிலும் தம் ஆய்வைத் தொடங்கி, இன்றுவரை தொடர்ந்து கொண்டுள்ளான். நிலவில் தன் கால்தடம் பதித்த ஆய்வாளன் இன்று சுக்கிரன். சனிக் கோள், வியாழன் கோள் என்று தன் ஆய்வுக் களங்களை விரிவுபடுத்திக் கொண்டே போகிறான். சூரிய மண்டலம் முழுவதிலும் தன் ஆய்வுத் தடங்களைப் பதித்த மனிதன்