பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69


பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மனிதக்கரு எப்படி உருவாகிறது என்பது தெளிவாகத் தெரியாமலேயே இருந்தது. அதுவரை பெண் வயிற்றில் இயல்பாக உருவாகியிருக்கும் கரு வளர்ந்து குழந்தையாகப் பிறக்கிறது என்றே உலகம் கருதி வந்தது.

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேதான் வில்லியம் ஹார்வி எனும் உயிரியல் விஞ்ஞானி தன் ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பின் ஆணின் இந்திரியத் துளியிலுள்ள ஒரு உயிரணு பெண்ணின் யோனிக் குழாயிலுள்ள உயிரணு முட்டையோடு இணைந்து அவளது கருவறைக்குள் சென்று, பத்து மாதங்கள் படிப்படியாக வளர்ந்து, பத்தாவது மாதம் குழந்தையாகப் பிறக்கிறது என்பதைக் கண்டறிந்து கூறினார்.

ஆனால், எந்தப் புதிய ஆராய்ச்சி முடிவைக் கண்டறிந்து, பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வில்லியம் ஹார்வி கூறினாரோ, அதே தகவல் தெளிவாகவும் திட்பமாகவும் திருக்குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ளதெனில் இஸ்லாம் எவ்வளவு உயர்ந்த - சிறந்த அறிவியல் மார்க்கம் என்பதை நாம் உய்த்துணரலாம்.

அதிலும், இக்கரு வளர்ச்சியைப் பற்றிய செய்திகளெல்லாம் 'சதைக் கட்டி' (அலக்) என்ற தலைப்பிலான இறை வசனப் பகுதியிலேயே விவரிக்கப்படுகிறது. இச்சதைக் கட்டியைப் பற்றிய தெளிவை மேலும் அறியும் பொருட்டு டாக்டராக இருக்கும் என் மகனிடத்திலே விவரம் கேட்டபோது,

'கருவறையைச் சென்றடையும் கருவணுவோடு கூடிய முட்டை கருப்பைச் சுவற்றிலே நன்கு ஒட்டிக் கொள்ளும். அப்பசை அவ்வளவு வலுவானது. நாற்பது நாட்களில் கருப்பையில் வளரும் முட்டையின் வடிவமானது சிறிதளவு தசையை வாயில் போட்டு நன்கு மென்று துப்பினால்