பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

பார்வை நேராக ஒரு பொருளில் போய் நிற்கும். அப்பொருளின் முழுமையான, தெளிவான தோற்றம் நம் கண்களுக்கு தெளிவாகத் தெரியும். ஆகவே, இஸ்லாத்தை சரியான கோணத்தில் புரிந்து கொள்வதற்கு ஆன்மீகமும் அறிவியலும் மிக அடிப்படையாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமிய நெறி என்பது ஆன்மீக அடிப்படையில் உருவாக்கப்பட்ட, அறிவியல் போக்கிலான ஒரு வாழ்க்கை முறை என்பதை உலகம் இன்றைக்குத் தெளிவாகப் புரிந்து கொண்டு வருகிறது.

இதையே வேறு வகையில் கூறுவதென்றால் 'அறிவியல் இல்லாத ஆன்மீகம் குருடானது. ஆன்மீகம் இல்லாத அறிவியல் முடமானது' என்று கூறலாம்.

ஆலீம்களும் அறிவியலாளர்களும் ஒன்றிணைய

இத்தகைய தெளிவை உருவாக்க இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான உலமா பெருமக்களும் அறிவியல் உணர்வும் அறிவும் நிரம்பப் பெற்ற அறிவியல் ஆய்வறிஞர்களும் இணைந்து பணியாற்றும் இனிய சூழலை உருவாக்க முன் வர வேண்டும்.

அப்போதுதான் இஸ்லாமிய நெறியின்பால் தங்கள் பார்வையைச் செலுத்த முனையும் பிற சகோதர சமயங்களைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தின் அதி உன்னதக் கருத்துகளை அறிந்துணர்ந்து தெளிய இயலும். இவ்வகையில் பெருமானாரின் பெரு வாழ்வையும் இறைமறையின் அருங்கருத்துகளையும் அறிய நேரும்போது இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சொல்லப்படும் அறிவியல் செய்திகள், கண்டுபிடிப்புகள் 1400 ஆண்டுகட்கு முன்பே இஸ்லாமியத் திருமறையாம் திருக்குர்ஆனில் ஆதாரபூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளதே என்று வியப்படைவதோடு அவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத் துடிப்பும் மற்றவர்கட்கு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். அந்த