பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84



இம் மீரா ஃபெளண்டேஷன் மூலம் எட்டு இஸ்லாமிய இலக்கியக் கருத்தரங்குகளை நடத்தினேன். குட்டி மாநாடுகள் போல் நடைபெற்ற இக்கருத்தரங்குகளில் பங்குபெற்ற ஆய்வாளர்களாகட்டும் பார்வையாளர்களாகட்டும் முஸ்லிம்களைவிட முஸ்லிம்மல்லாதவர்களே அதிகம் இடம் பெற்றனர். சீறாச் செல்வர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களைக் கொண்டு உமறுப்புலவரின் 'சீறாப்புராணம்' காப்பியத்தை தொடர்ச் சொற்பொழிவாக 27 கூட்டங்களிலும் வண்ணக்களஞ்சியப் புலவரின் 'ராஜ நாயகம்' காப்பியத்தை தொடர்ச் சொற்பொழிவாக 27 கூட்டங்களிலும் சொற்பொழிவுவாற்றச் செய்தேன். கருத்தரங்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தொடர்ச் சொற்பொழிவுகளையும் நூலுருவாக்கி வெளியிட நான் தவறவில்லை.

இவற்றில் பங்கேற்றுப் பேசியவர்கள் எல்லா சமயங்களையும் சார்ந்தவர்களாவர். இவர்கள் இஸ்லாம் தொடர்பான நூல்களையெல்லாம் வாங்கிப் படித்து, அதில் ஏற்படும் சந்தேகங்களையெல்லாம் தக்கவர்களிடம் கேட்டு, தெளிவடைந்து பின் பேசுவார்கள். ஏனெனில், தாங்கள் ஏதாவது பேசிவிட்டால் முஸ்லிம்களும் மற்றவர்களும் தங்களைத் தவறாகக் கருதக்கூடுமே என்ற அச்சத்தில் ஆதாரபூர்வமான செய்திகளை, கருத்துகளையெல்லாம் சேகரித்து, முறையாகப் பேசுவதில் முனைப்புக் காட்டினார்கள். இதனால் அவர்களின் இஸ்லாம் தொடர்பான பேச்சுகள் சிறப்பாகவே அமைந்தன - அமைகின்றன.

தொட்டவர்கள் சித்தர்கள், முடித்தவர்கள் சூஃபிகள்

இஸ்லாமிய இலக்கியங்களை உமறுவின் சீறாப் புராணத்தையும் வண்ணக்களஞ்சியப் புலவரின் ராஜ நாயகம் எனும் சுலைமான் நபி வரலாற்றை விரித்துரைக்கும் இலக்கியத்தையும் 50-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் தொடர்ச் சொற்பொழிவாற்றிய சீறாச் செல்வர் சிலம்பொலி