பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

போற்றப்படுவதுதான் சிறப்பு. அந்நிலையைப் பெற நாமும் நல் முயற்சிகளில் முனைப்போடு ஈடுபட வேண்டும்.

ஆனாலும், இஸ்லாமிய சமுதாயம் ஒரு இடர்ப்பாடான கால கட்டத்தை இந்தியாவில் கடந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு நிதர்சனமான உண்மை.

அன்றைய சிலுவைப் போர் இன்னும் சாகவில்லை!

இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தவறான கருத்துகளும் உணர்வுகளும் வலுவாகப் பரப்பப்பட்டு வருகின்றன. ஒரு கால கட்டத்தில் மேலை நாட்டில் சில சமயத் தலைவர்களால் வெறித்தனமாக உருவாக்கப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்புணர்வு சிலுவைப் போராக உருமாற்றப்பட்டது. இதன் செயல்பாடுகளும் விளைவுகளும் கரைபடிந்த வரலாற்று ஏடுகளாகும். நீண்ட காலமாக நீறு பூத்த நெருப்பாக இருந்த சிலுவைப் போர் இன்று வெவ்வேறு பெயர்களில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலே வாழும் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதன் சாயலில் இஸ்லாமிய நாடுகளிலும்கூட வெவ்வேறு வகையான சண்டை சச்சரவுகள் உருவாக்கப்பட்டு நடந்து வருகின்றன.

அதன் விளைவுகள் இந்தியா போன்ற கீழை நாடுகளில் பிரதிபலிக்கவே செய்கிறது. இஸ்லாத்தைப் பற்றி அறவே தெரியாதவர்கள் மத்தியில், இஸ்லாமியர்களின் பெயரிலே, வேண்டுமென்றே தவறான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருவது கண்கூடு. முஸ்லிம் மக்களிடையேகூட இஸ்லாத்தைத் தெரிந்தவர்கள் பல பேர் இருக்கலாம். ஆனால், உணர்ந்து தெளிந்தவர்கள் ஒரு சிலர் தேறுவதேகூட கடினமாக உள்ளது.

இஸ்லாத்தை அறிந்தவர் அநேகர் தெளிந்தவர் சிலர்

எதையும் தெரிவது வேறு; உணர்வது வேறு. சான்றாக, ஒருவன் ஒரு கட்டிடத்தைப் பார்த்த மாத்திரத்தில்