14 ஒரு முறையன்று; கிட்டத்தட்ட 28 முறை படையெடுப்பில், அல்லது பிறரைப் படை எடுக்கத் தூண்டும் முயற்சியில் மக்கமா நகரவாசிகள் ஈடுபட்டனர். ஆனால் ஒரு முறைகூட அவர்கள் வெற்றி பெறவில்லை. அவர்களில் பலர் சிறைப்பட நேர்ந்ததுண்டு. தங்கள்பால்கைதிகளாக்கப்பட்டுள்ள, தங்களைப் பகைத்தழிக்க முயன்ற மக்காவாசிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடத்திய விதத்தை இஸ்லாத்தை வெறுத்தொதுக்கு கின்ற மேனாட்டு ஆசிரியர்கள் கூட பாராட்டவே செய் துள்ளனர். ஏழு ஆண்டுகட்கு மேல் பொறுத்துப் பார்த்த பின்னர் இவர்கள் நம்மை நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் எனக் கண்ட பின்னரே மக்க மாநகருக்குள் தமது தோழர்களுடன் நுழைந்தார்கள் நாயகத் திருமேனி அவர்கள். இந்தப் பிர வேசத்தைப் படையெடுப்பு என்று சொல்வதற்கில்லை. ஏனென்றால் சண்டை நடக்கவில்லை; யாரும் கொல்லப்பட வில்லை; துளி இரத்தம் கூடச் சிந்தப்படவில்லை; யாரையும் கைதியாகப் பிடிக்கவில்லை. நாமக்கல் கவிஞர் பாடுவாரே 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்று, அது முதன் முதல் நடந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறவழியில்தான், ஜெயசீலராக மக்கம நகருக்குள் நுழைந்த நபிகள் நாயகம் அவர்கள் அந்த நகரவாசிகட்கு விடுத்த அறிவிப்பு; “நீங்கள் விரும்பினால் இஸ்லாத்தில் சேரலாம். இஸ்லாத்தில் கட்டாயமில்லை. நீங்கள் அனைவரும் மன்னிக்கப்பட்டு விட்டீர்கள்" என்பதுதான். தங்களை நபிகள் நாயகம் அவர்கள் மன்னிப்பார்கள் என மக்காவாசிகள் நினைத்திருக்கவில்லை. எனவே அவர்கள் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நாயகத்திருமேனி அவர்கட்கு ஏற்பட்டு வருகின்ற செல்வாக்கைக் கண்டு பொருமையுற்ற ரோமர்களும் பர்சிய
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/23
Appearance