உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 செய்து தோல்விகண்ட ஒரே ஒரு சம்பவம் மட்டுமே உலகில் நடந்துள்ளது. கி.பி. 12, 13 வது நூற்றாண்டில் அன்றைய வாடிக்கன் குருபீடத்தின் ஆசியுடன் ஈராக், ஈரான், எகிப்து ஆகிய இஸ்லாமிய நாடுகளின் மீது நடத்தப்பட்ட சிலுவைப் போர் ஒன்றுதான் அது. விடாமல் பலமுறை படை எடுப்பு நடத்திய அந்தப் போரின் போது தான் மதச்சின்னமாகிய சிலுவையும் அச்சிலுவை முனையில் பைபிளும் இருந்ததாக வரலாறு இயம்புகின்றது. வலிந்து இஸ்லாமியர்கள் மீது திணிக்கப்பட்ட அந்த போரில் தோல்வி கண்ட ஐரோப் பியரை, மன்னித்திருக்கிறது இஸ்லாம் என்ற உண்மை யினை படித்தோர் அறிவர். இது தவிர்த்து மதப் பரப்பிற் கென ஒரு போர் எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் நடந் திருப்பதாக நாம் படித்ததில்லை. காமகோடிபூடம் ஆச்சாரியப் பெரியவாள் கூறுகின்றார்கள், இஸ்லாம் வாள் கொண்டு பரப்பப்பட்டதென்று. இதற்கு அவர்கள் ஆதாரம் எதுவும் காட்டவில்லை. குற்றம் சாட்டிடும்போது சான்றுரைப்பது அவசியம் அல்லவா? தற்காப்புப் போர்புரிந்தது மட்டுமே இஸ்லாமியப்போர் வரலாறாக உள்ளது. ஆனால் முகம்மது நபி ஆக்ரமிப்புப்போர் நடத்தினார் என்று மேனாட்டுச் சரித்திர திரிபாசியர்களில் சிலர் கதைத்துள்ளனர். தான் பிறந்து வளர்ந்த மக்கமா மாநகரில் இஸ்லாமியப் பிரக்சாரம் செய்ய இயலாதபடி அங்குள்ள பல தெய்வ உருவ வணங்கிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கட்குத் தொல்லை கொடுத்தார்கள். கொன்று விடவும் முயன்றார்கள். அதே நேரத்தில், மதீனா நகரவாசிகள் தங்கள் நகரில் வந்து வசிக்கும் படிக்கும் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யும்படிக்கும் நபிகள் நாயகம் அவர்களை அழைத்தார்கள். 53ம் வயதில் தமது தோழருடன் நள்ளிரவில் புறப்பட்டு கிட்டத்தட்ட முந்நூறு மைல்கட்கு அப்பால் உள்ள மதினமா நகருக்கு நாயகத் திருமேனி அவர்கள் சென்று விட்டார்கள். அதன் பின்னரும் மக்காவாசிகள் ஓய்ந்திருக்கவில்லை.