உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கேட்க வேண்டியதில்லை. நடுநிலைமனமுள்ள பள்ளி மாணவன் கேட்கின்ற காலம் இது. எனவே படித்தும் பதராகிவிட்ட சில ஏமாளிகள் வேண்டுமானால் இஸ்லாம் வாள்கொண்டு பரப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற கதையை நம்பலாம். அதுவும் கற்ற நன்மனத்தவரால் தள்ளி எள்ளி நகையாடப் படும். அத்தகைய விழிப்பான காலம் வந்து கொண்டிருக் கிறது. இஸ்லாம் வாள் கெபண்டு பரப்பப்பட்ட மார்க்கம் என்பதைப் பாமர மக்களின் மனத்தில் பதியவைக்கும் நோக் கில் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இக்கூற்றை முதன்முதலில் துவக்கியவர் யார் எனத் தெரியவில்லை. ஆனால் நீண்ட நெடுங்காலமாகக் கூறப்பட்டு வருகிறது எனினும் இக்கூற்றை எந்தப் பாமரனும் நம்பு வதாயில்லை. படித்தவர்களில் சிலர் மட்டும் ஆய்வின்றி எங்கோ, எவரோ எழுதியதைப் படித்து விட்டு தாங்கள் கற்றதே உண்மை என நம்பி. அல்லது வேண்டும் என்றே திரும்பத் திரும்ப உரைக்கின்றார்கள் எனக் கருத வேண்டி யுள்ளது. இதில் ஒரு அதிசயம் என்னவென்றால்; சிவசமக் அத்வைத தத்துவத்தை வலியுறுத்துகின்ற கோள்' சமயம் சார்ந்த மடத்தின் தலைமை பீடத்தில் இருக்கின்ற ஸ்ரீலஸ்ரீ காமகோடி பீடமாகிய மதிப்புமிகு சங்கராச்சாரியார் சுவாமி அவர்களே கூட இதைச் சொல்லத் தவறவில்லை. ஆம், சில ஆண்டுகட்கு முன்னதாக, கல்கி எனும் வார ஏட்டிலே "ஒரு கையில் வாளும் ஒருகையில் குர்ஆனும் ஏந்தி, இதில் எது வேண்டும்? கேட்டு குர்ஆனை ஏற்குமாறு செய்து பரப்பப்பட்ட மதம் இஸ்லாம் மதம்" என்பதாக மதிப்புமிகு காஞ்சி பெரியவாள் எழுதினார்கள். என்று நாம் அறிந்த வரையில் உலகில் எந்த ஒரு சமயமும் வாள் கொண்டு பரப்பப்பட்டதாகத் தெரியவில்லை. அப்படிச்