உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 நம்முடன் வாழுகின்ற இந்து சமயத்தைச் சார்ந்தவர்களில், பலர், ஒரு மனைவி சட்டப்படிக்கும் பல மனைவி சட்டமல்லாத வழியிலுமாகக் கொண்டு வாழுவதைக் காணுகிறோம். இந்த நிலையை இந்து சமயத் தலைவர்களில் யாரும் கண்டித்தாகத் தெரியவில்லை. அத்தகையோரைப் பாராட்டி ஆசீர்வதிக்காமல் இருந்ததுமில்லை. இஸ்லாமியன் ஒருவன் பகிரங்கமாக இப்படி சட்டப்படி அல்லாத மனைவியுடன் வாழ்ந்து விடுவது என்பது நடைபெறக் கூடியதன்று. நமது நாட்டில் இது (இஸ்லாமி நாடு அல்லாததினால்) யாரேனும் ஒரு முஸ்லீம் அப்படி வாழ்வாரேயானால் முஸ்லிம் சமுதாயத்திலிருந்தே அவர் புறக் கணிக்கப்பட்டு விடுவார். தெய்வங்கட்கே பல மனைவியர் பேசப் படுவது இந்து சமயத்தின் நடைமுறை. இவற்றுக்கு முற்றிலும் மாறானது இஸ்லாம். இஸ்லாமியத் தத்துவத்தை மறுக்க முடியாததினால் நான்கு மனைவிக் கதைகளையும் கத்னா (விருத்தசேதனம்) செய்வதையும், இஸ்லாமியப் பெண்கள் வீட்டுக்கு விலக்கானால் தனித்திருக் காமையையும், பலர் ஒன்றாக சேர்ந்து உண்பதையும், தட்டு களில் சாப்பிடுவதையும், குவளையை வாயில் வைத்துத் தண்ணீர் குடிப்பதையும் ஒரு காலத்தில் சனாதன இந்துக்கள் குறை கூறினர். இன்று இவை அனைத்தும் அவர்கள் இல்லங் களில் புகுந்திருப்பதைக் கண்டும் காணாதவர் போன்று இருக் கின்றனர். இவைபோன்றே, இஸ்லாமியத் தத்துவத்தை மறுக்க வியலாத நிலையில், "இஸ்லாம் தத்துவார்த்தமாக நல்ல மார்க்கமாக இருக்கலாம் சார், ஆனால் அது வாள் கொண்டு பரப்பப்பட்டதாயிற்றே' என்கின்றனர். இன்று அதுவும் செல்லுபடியாகாததாகி விட்டது. காரணம், இன்றைய உலகம் ஆதாரமின்றிக் கூறுவதை ஏற்பதாயில்லை. வாள் கொண்டு இஸ்லாம் எங்கே எப்பொழுது யாரால் பரப்பப் பட்டது? ஆதாரம் என்ன நீங்கள் கூறுவதற்கு? என முஸ்லிம்