உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 உலக வாழ்விலிருந்தே வீடுபேறு என்கின்ற மறு உலக வாழ்வு விளைவாகின்றது என்பதே இஸ்லாம். உலக வாழ்வு அநித்தியம், அதைத் துச்சமென ஒதுக்கிக்தள்ளித் துறவு சேர்வோர்க்கே மோட்சம் என்பது இந்துமத போதம். அதனாற் றான் இல்லற வாசிக்கும் கூட வானப் பிரஸ்தமும் பின்னர் துறவு நிலையும் பேசப்படுகிறது. இந்து சமயங்கள், கடவுள் நெறியை உரைக்கின்ற நூற் களை, வேத இதிகாச ஞான நூற்களென்றும் உலக வாழ்வியல் நூற்களை, அறநூற்களென்றும் பிரித்துள்ளன. இஸ்லாமியர்கட்கு, வீடு பேறு பெற வழிகாட்டுவதும் உலக வாழ்விற்கான சட்ட திட்டங்களை வகுத்துரைப்பதும் திருக்குர்ஆன என்கின்ற திருமறைதான். எனவே இஸ்லாமி யன் ஒருவன் திருக்குர்ஆனுக்கு மாறுபட்டு நடப்பது தண்டனைக் குரிய குற்றம் ஆகிறது. உதாரணமாக விபச்சாரத்தில் ஈடுபட் டால் அது ஒரே முறைதான் என்றாலும் ஈடுபாடு கொண்ட ஆண், பெண் இருவருமே தண்டனைக்குள்ளாகின்றனர். இந்து சமய வேதங்களில் இதுபற்றிய குறிப்பில்லாததினால் விபச்சாரம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக ஒப்புக்கொள்ளப்பட்டு அதற்கென தேவதாசி என ஒரு சாதியே உண்டாக்கப்பட்டு விட்டது. தேவதாசி முறையை அரசியல் சட்டம் கொணர்ந்து ஒழிக்கப்பட்டது சமீப ஆண்டுகளில்தான். அதுபோது கூட இந்து சனாதனிகள் தாசிகள் ஒழிப்புச்சட்டம் கூடாதெனக் கூச்சலிட்டனர் என்பது வரலாறு. இதே போன்று, ஒருவன் எத்தனை மனைவியுடன் வாழலாம் என இந்து சமயத்தில் வரையறை இல்லை. இஸ்லாம் ஏக காலத்தில் நான்கு மனைவியர்க்கு மேல் கூடாதென்கிறது. இதைப்பார்க்கின்ற இந்துக்கட்கு வியப்பாகத் தோன்றுகிறது. ஒரு மனைவியுடன் வாழ்வதே தங்கள் மத ஆச்சாரம் என நம்பு கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பது சமீப காலத்திய இந்திய அரசியல் சட்டம். அந்தச் சட்டமும் சட்டப்படி மனைவி யாகக் கொள்வதைத் தடுக்கின்றதே தவிர, சட்டப்படி அல்லாத மனைவியருடன் வாழ்வதைத் தடுக்கவில்லை.