9 பைபிளில் விஞ்ஞானம் ஒப்பக்கூடியது ஒன்றுமே இல்லை; திருக்குர்ஆனிலோ விஞ்ஞானத்திற்கு மாறுபட்டது இல்லவே இல்லை" என்பதாம். இக்கருத்தினை வெளியிட்டுள்ள விஞ்ஞானியின் பெயர், திரு. டாக்டர் மாரிஸ் புகையீல் என்பதாகும். கிறித்துவரான இவர் பிரெஞ்சு நாட்டினர் ஆவார். திருக் குர்ஆனை அதன் மூலமொழியான, அரபி மொழியிலேயே படித்தறிந்தவர். பைபிளையும் சரியாகப் படித்தறிந்துள்ளார். இவர் எழுதிய நூல் தமிழில் மொழிபெயர்ப்பாகியுள்ளது. நூலின் பெயர், விஞ்ஞான ஒளியில் பைபிளும் திருக்குர்ஆனும்" என்பதாகும். இந்து சமயச் சன்மார்க்கிகள் கூறியுள்ள தத்துவங்களில் பெரும்பான்மை இஸ்லாமியத் தத்துவத்திற்கு ஒத்திருக்கக் காணலாம். இவர்களையொத்தவர்களே வேதகால ரிஷிகளும். அவர்கள் தம் உரைகளிலும் இஸ்லாமிய நெறிமுறை பெருக் கெடுத்தோடக் காணலாம். இந்த வேத கால ரிஷிகளின் கைப்பட்டதே உபநிஷத்துக்கள். உபநிஷ்த்துகளின் அடிப் படை, இறைநெறிக்கொள்கை இஸ்லாத்திற்கு மாறுபட்டிருக்க வில்லை என்பதைக் கண்டோம். அதாவது, இன்னொன்றை நாம் கவனிக்கவேண்டும். கடவுளை நம்புகின்ற சமயங்களில் இஸ்லாம் ஒன்றைத்தவிர்த்து ஏனைய சமயங்கள், சிறப்பாக இந்து சமயம் வீடுபேறு பற்றிய கோட்பாட்டை, குறிக்கோளை மட்டுமே முதலும் முடிவுமாகக் கொண்டிருக்கக் காண்கிறோம். குறிப்பாக. படிப்பறிவு என்பது கடவுளை அறிந்து கொள்ள விரும்பு கின்ற, அறிந்துரைக்கக் கூடிய மேலவர்கட்குத் தேவையே தவிர ஏனையோருக்கு உழைப்பும் கேள்வி ஞானமும் போதும் ஏன்பதாகும். இஸ்லாம் இக்கருத்திற்கு இக்கருத்திற்கு முரணானதாகும். அதாவது, உலக வாழ்வில் ஆண்பெண் என்கின்ற இரு பகுப்பாருக் கும் கல்வி அவசியம் என வலியுறுத்துவதாகும். அதாவது,
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/18
Appearance