8 உபநிஷத்துகள் பல. அவற்றை இந்து சமயவேதங்களின் சாரம் என்பர். அந்த உபநிஷத்துக்களில் ஒன்றே கேனோப நிஷத். அது கூறுகிறது: "கடவுள் காதுக்குக் காதாயும் மனதுக்கு மனதாயும் வாக்குக்கு வாக்காயும் பிராணணுக்குப் பிராணனாயும் கண்ணுக்குக் கண்ணாயும் உள்ளான். நாம் அறி யாத்தரத்தவன்' என்று. மற்ற ஞானவான்களின் கூற்றுக் களையும் கண்டோம். இவை யாவும் இந்து சமயம் ஒப்பி உள்ள வைகளே. ஆனால் நடைமுறையில்தான் இல்லை. இஸ்லாமி யர்கள் இவற்றை அப்படியே ஏற்றிருப்பது மட்டுமின்றி நடைமுறையிலும் கைக் கொண்டொழுகுகின்றனர். ஒரு வகையில் சொல்வதென்றால் இந்து சமய ஞானிகன் உரைத் திருப்பதை. இந்து சமய வேத சாரமான உபநிஷத் புகலுவதை முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்தி அவற்றிற்கு உயிர் ஊட்டி வருகின்றனர். இந்துக்கள் கொள்கை அளவில் ஏற்று, ஆனால் நடைமுறைப்படுத்த இயலாதிருப்பதை இஸ்லாமியர் நடை முறைப்படுத்துகின்றனர் என்றால். இந்துக்கள் இஸ்லாமியர் கட்கு நன்றியல்லவா செலுத்த வேண்டும்? எங்களால் இய லாததை நீங்கள் செயல் படுத்தி எங்களின் உண்மைத்தத்துவங் களை நிலைபெறச் செய்து வருகிறீர்க!ேள உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள் என்று கூறி வாழ்த்த அல்லவா வேண்டும்? ஆனால் நடைமுறை? ஆனால் வழி தவறியவர்கள் நேர்வழி செல்வோரை இகழ்ந்துரைக் கின்றனர். ஒன்று. இஸ்லாமியத் தத்துவத்தை இன்றுவரை எந்த ஒரு இந்துவும் குறை கூறியதில்லை. கூறவும் இயலாது. இஸ்லாம் விஞ்ஞான வழியில் சிறிதும் பிசகின்றி நடக் கின்ற நெறியாகும் என்பதை சமய அறிவுடைய விஞ்ஞானிகள் ஏற்றுள்ளனர். உதாரணமாக அண்மையில் பிரஞ்சு விஞ்ஞான மேதை ஒருவர் பைபிளை யும் திருக் குர்ஆனையும் விஞ்ஞான உரைகல்லில் உரைத்துப் பார்த்துள்ளதைக் கூறலாம். அவர் கண்ட முடிவு-
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/17
Appearance