7 மட்டுமின்றி உலகில் உள்ள, இறை நம்பிக்கையுடைய எல்லாச் சமயங்களுமே மேலே கூறப்பட்டுள்ள நெறிகளை ஒப்புக் கொள்ளத்தான் செய்கின்றன. ஆனால் நடைமுறை தான் சரியில்லை. சொல்லும் செயலும் ஒன்று பட்டிருப்பதே உயர்ந்த நெறியாகும். ஆனால், கடவுள் நெறியில் இஸ்லாமியர்களைத் தவிர்த்து வேறு சமயத்தாரிடம் சொல்லும் செயலும் ஒன்று பட்டிருக்கவில்லை என்பது கண்கூடு. “ஒன்றேகுலம், ஒருவனே தேவன்" என்பது இந்து சமயத் தில் இணைந்துள்ள சைவசமயத்தாரின் கொள்கை. ஆனால் நடைமுறையில்? 83 'பண்ணேன் உனக்காக பூசை (உன்னை) ஒரு வடிவிலே பாவித்து என்பது தாயுமானவரின் இறைவணக்க நெறி. ஆனால் இதர இந்துக்களின் நிலை,நெறி? 66 'கல்லிலும் செம்பிலும் உள்ளானோ கண்ணுதல?" என்று கேட்பார் ஒரு இந்து சமய ஞானி. ஆனால் அச் சமய மக்கள்? "கேட்டாலும் அழியாதான், கேடொன்றில்லான். கிளை யொன்றில்லான். கேளாதே எல்லாம் கேட்பான்" இது மாணிக்கவாசகரின் மணிமொழி- திருவாசகம். "அண்டம் கடந்த பொருள், அளவிலாத தோர் ஆனந்தப் பொருள். பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் 86 .. -சேந்தனார் திருப்பல்லாண்டு. "அங்கே கண் செல்லாது, வாக்குச் செல்லாது, மனது செல்லாது, அதை நாம் (உள்ளபடி) அறியமாட்டோம். ஆகையால் அதுபற்றி உபதேசிக்கும் வழியும் தெரிய வில்லை. அது நாம் அறிந்த பொருள் ளை விட அறியாத பொருள்களுக்கும் அப்பால்பட்டது... .. வேறு "காதுக்குக் காதாயும் மனதுக்கு மனதாயும் வாக்குக்கு வாக்காயும் உள்ளது எதுவோ அதுவே பிராணனுக்குப் பிராணனாயும் கண்ணுக்குக் கண்ணாயும் உளது...” கேனோபநிஷத்,
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/16
Appearance