6 . இந்துமத விற்பன்னர்கள், வேதகாலம் என்றொரு காலக் கணிப்பைத்தருவர். அக்கால மக்கள் தெய்வ வழிபாட்டில் எத்தன்மையினராயிருந்தனர் எனத் துல்லியமாகக் கூறினார்கள் இல்லை. ஆனாலும், அக்கால ரிஷிகளின் வாழ்க்கை நெறி, வணக்க நெறி பற்றி இயம்பப்பட்டுள்ளதைப் படிக்கின்றோம். வேதகால ரிஷிகள் காடுசார்ந்த வாழ்வினர். அவர்களில் பலர் குடும்பிகள். மனைவி, ஏன் மனைவிகள் குழந்தைகள் எல்லாம் அவர்கட்கு உண்டு. இவர்களில் பலர் பலசாத்திரங் களைத் தந்துள்ள கர்த்தாக்களாகவும் பேசப்படுகின்றனர். ஆனால் இவர்கள் வணங்கிய தெய்வங்களின் பெயர் இதுதான் என்று நிச்சயித்துக்கூற இயலாதாயுள்ளது. இது போன்று இவர்களைப் படிவ (உருவ) வணங்கிகளாகவும் கண்டுரைக்கப் பட்டிருக்கவில்லை. இவர்களின் வழிமுறையை ஒட்டி இந்தியா வில் இன்றுள்ள சமயம் எது? இவர்களின் நெறிக்கு இஸ்லாம் மாறுபட்டதா? ஆம் எனில் எவ்விதம்? இஸ்லாமியச்சமயக் கொள்கைகளில் எது ஒன்றையும் எந்த வகையிலும் இந்து சமயத்தினரால் குறைகூற இயலாது. “இறைவன் ஏகன். பிறப்பற்றவன், இறப்பற்றவன், பிணிமூப்பில்லன், பனைவி மக்கள் இல்லாத் தனியன், உடன் பிறப்புக்கள் இல்லான், பெற்றோரில்லான். உருவிலி, ஒப்பிலி, காணற்கியலான், கருத்தால் மட்டுமே அவனை நாம் உணர இயலும். இப்பிரபஞ்சத்தைப் படைத்தவன், காப்பவன், அழிப்பவன் அவனே. அவனின்றி ஓர் அணுவும் அசையாது. அவன் முன்னர் ஏழையும் பணக்காரனும் சமமே. சாதிப் பிரிவுகள் மனிதன் படைத்துக்கொண்டதே. இறைவன் ஏற்றத் தாழ்வுகளையோ, சாதி பேதங்களையோ விரும்பாதவன். இன்ன தரத்தான் என்று அறுதியிட்டு உரைக்க இயலா இயல் பினன்... 29 இவை அனைத்தும் இஸ்லாமிய நெறி என்று ஒரு முஸ்லீம் கூறினால், "எங்கள் சமய நெறியும் இதுதான்” என்று மார் தட்டிக் கூறிட ஓர் இந்துவினால் இயலும். இந்து சமயம்
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/15
Appearance