உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 "சைவம்", சிவ வணக்கச் சமயம் ஆகும். காணபத்தியம் என்பது, கணபதி (பிள்ளையார்) வணக்கக் காரர்களின் சமயம் ஆகும். •கௌமாரம்' ஏற் என்பது, முருகனைப் பிரானாக றுள்ளாரின் சமயம் என்பர். இன்னும்,சக்தி வணக்கம, இந்திர வணக்கம் போன்ற பல சமயங்கள்! பெயரை உரைத்தாலே வணங்கும் தெய்வம் எது எனக்கூறி விடுகின்ற தன்மையில் அமைந்திருக்கக் காணலாம். ஆனால், இந்து மதம், அல்லது இந்து சமயம் என்று கூறினால் அதற்குரிய தெய்வம் எது என பகுத்துரைக்க இயலாது. மேலே சொன்ன எல்லாவிதத் தெய்வங்களுடன் பெயர் குறிப்பிட்டடங்காப் பல தெய்வ வழி பாடுகளையும் இந்து மதத்தில் காண்கின்றோம். எனவே தான் 'இந்து மதம் என்பது ஒரு தனி மதமன்று. பல மதங்களின் தொகுப்பு" என, இந்து சமய ஆய்வாளர்களே வைத்துள்ளனர். குறித்து இந்தியாவில் தோன்றிப் பெளத்த. சமண சமயங்களும் கூட வலுவற்றுத் தனித்தன்மையை இழந்து இந்துமதத்தின் ஒரு அங்கம் என்பது போன்று காட்சி தருவதால இன்றைய இந்தியாவில் இஸ்லாமும், கிறித்துவமும் மட்டுமே தனித் தன்மை பெற்ற இரு சமயங்களாக வலுவுடன் நிற்கின்றன. ஆக, இந்துமதம் என்ற தொகுப்புப் பட்டியலில் தங்கள் சமயங் களையும் இஸ்லாமியரும் கிறித்துவரும் இணைததுக் கொள்ளாத தினால், இணைத்துக் கொள்வதை விருமபாததினால் இவ்விரு சமயங்கட்கும் மாறுபட்டதாக இந்து மதம் என்ற சொல் பயன் படுத்தப்படுகின்றதென்றால் பொருந்தும். இதர வகையில் இந்து சமயம் என்கின்ற தொகுப்புச் சமயங்கள் பேசுகின்ற உண்மையான தத்துவத்திற்கு இஸ்லாமிய சமயம் எந்தெந்த வகையில் மாறுபட்டிருக்கிறது? என்பதை சமயாச்சாரியர்கள் சுட்டிக் காட்டியதில்லை. காட்டிடவும் இயலாது.