உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தச் சொல், இந்தியாவினுள் வெளிச் சமயங்கள் தோன்றிய பின்னர் எழுந்த சொல் எனலாம். காரணம், தனக்குத்தானே இந்துமதம், அதாவது இந்தியமதம் என்று கூறிக் கொள்ளக் காரணம் இருக்காதல்லவா? வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் வந்த காலை தாங்கள் ஏற்றுள்ள சமயங்களில் நின்று இந்தியாவில் உள்ள சமயங்கள் நடைமுறையில்மாறுப டுடையதாகத் தோன்றிய காரணத்தால் அவர்கள் இங்குள்ள சமயங்கட்கு ஒட்டு மொத்தமாக இட்டழைத்த பெயரே இந்துமதம் எனக் கூறப்படுகிறது என்றால் அது உண்மையேயாம். அபுல்கலாம் ஆசாத். அவர்கள், இமாமுல் இந்த்" எனச் சுட்டப்படுவார்கள். இதன் பொருள், "இந்தியாவின் தலைவர்'" என்பதாகும். முஸ்லிம்கள் அபுல்கலாம் ஆசாத் அவர்களை, இமாமுல் இந்த் எனப்பகர்வதைக் கொண்டு அவரை

  • இந்துக்களின் தலைவர்' என்று சுட்டினர் என்றாகாதல்லவா?

மற்றும் 'ஜமாஅத்தே இஸ்லாமி இந்த்' என்கின்ற பெயரில் இந்தியா முழுவதற்குமான ஒரு அமைப்பு இயங்கி வருகிற தென்பதை அறிவோம். இதன் பொருள் "இந்திய இஸ்லாமிய மக்களின் சபை" என்றாகின்றது. முஸ்லிம்கள் தங்களின் சமயம் சார்ந்த சபை ஒன்றினுடன் இந்த்' என்ற பெயரையும் இணைத்துக் கொள்வதிலிருந்து இந்து என்பது இந்தியாவைக் குறிக்கின்ற சொல் எனத் தெரிகின்றது. எனவே இந்துமதம் எனறால் அது இந்தியாவின் மதம் என்றாக்குமே தவிர வேறு பொருளைத் தராதென்பது தெளிவு. ஆகவே, இந்துமதம் என்பது இந்தியாவில் தோன்றிய சமயங்கள் அத்தனைக்குமான மொத்தப் பெயரென்றாகின்றது என்றுரைப்பார்களின் கூற்றில் உண்மை இருக்கிறது. இன்னொன்று: . இந்து சமயம் என்கின்றபோது, அது ஒரு தனித் தத்து வத்திற்கு உரியதன்று என்பது தெளிவு. அதாவது; 'வைணவம்' என்றால் அது விஷ்ணு வணக்கத்திற்குரிய மதம் என்றாகின்றது. இதுபோன்றே,