உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால், இன்றைய நாள்வரை இப்படி ஒரு கேள்வியை தனக்குத்தானே எழுப்பிக் கொண்டு எந்த ஒரு இந்துமத தத்துவவாதியும் விளக்கங் கூறி, இஸ்லாத்தின் மீது மண்டனம் தெரிவித்தார்களில்லை. நாம் அறிந்தவரை, உலகத்திலுள்ள கடவுளை நம்புகின்ற எந்த ஒரு மதத்திலும், கடவுள் இரண்டு என்ற தத்துவம் இருப்பதாகக் தெரியவில்லை. நடை முறை எதுவானாலும் கடவுள் ஒன்று தான் என்ற நம்பிக்கை இல்லையென்றால், அது கடவுளை நம்புகின்ற சமயமாகாது. இதே போன்றே கடவுளுக்கு உருவம் இல்லையென்பதை, கடவுளை நம்புகின்ற எல்லாச் சமயங்களுமே, ஏற்றுத் திகழ் கின்றன என்பது தான் நாம் அறிந்த உண்மை. இந்த உண்மையை, அதாவது கடவுள் ஒன்றே, கடவு ளுக்கு உருவமில்லை என்ற தத்துவத்தை. இந்துமதம் ஒப்புக் கொள்ளாமலில்லை. நடை முறை வேறாக இருப்பினும் தத்துவ அடிப்படையில் உருவமற்ற ஒரு கடவுளை ஒப்புக் கொண்டு இயங்குவதுதான் இந்து மதம். இந்து மதமும் ஒப்புக் கொண்டிருக்கின்ற இந்த ஒரு உயர் நெறியை, உண்மை நெறியை இஸ்லாமியர் ஏற்று, இம்மி யும் அந்த நெறியிலிருந்து பிறழாது நடக்கின்ற போது. இஸ்லாம் இந்துமதத்திற்கு விரோதமானதென்று சொல்லு வதற்கில்லை. நடை முறையில் மாற்றம் உளதே என்றால், மாற்றம் யாரிடத்தில் என்பதுதான் கேள்வி. இந்து என்றால் என்ன பொருள் ? இந்து என்கிற சொல், இந்தியாவைக் குறிப்பதாகும். எனவே, இந்து மதம் என்றால், இந்தியாவின் மதம் என்றே ஆகும்.