2 கடவுள் இல்லை என்கின்ற சமயங்களைப் பற்றி நாம் இங்கு ஆராயத் தேவையில்லை. ஏனென்றால், இஸ்லாம் கடவுளை, அதிலும் ஒரே கடவுளை, உருவமற்ற கடவுளை ஒப்புக் கொண்டு இயங்குகின்ற சமய மாகும். இந்த அடிப்படை கடவுளை நம்புகின்ற எந்த ஒரு சமயததிற்குமே புறம்பானதன்று. இதனால்தான், 'இஸ்லாம் எந்தச் சமயத்திற்கும் விரோத மானதன்று' என நபிகள் நாயகம் (சல்) அவர்கள் உரைத் துள்ளார்கள் எனலாம். அப்படியாயின், கடவுளை ஏற்காத சமயங்களைப் பற்றி எப்படி? என்ற கேள்வி எழலாம். இதற்கு திருக்குர்ஆனில் உள்ள 'அவர்கள் வழி அவர்களுக்கு; உங்கள் வழி உங்களுக்கு' என்ற கருத்தின் வழிப்பட்ட வாசகம் பதிலாக உள்ளது. உ எனவே, எந்த ஒரு சமயத்திற்கும் (மதத்திற்கும்) இஸ்லாம், விரோதமாக இருக்கவில்லை. இஸ்லாமியர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற கொள்கை வழி நடப்ப வர்கள். அவர்கள். தங்களுக்கு மாற்றமான கொள்கையுடைய வர்களுடன் வலியச் சென்று போராடுகின்றவர்கள் அல்லர். இந்த அடிப்படையைக் கொண்டு நோக்குமிடத்து இஸ் லாம். இந்து மதத்திற்கு விரோதமான தென்று எவரும் சொல் வதற்கில்லை.ஆனால், இந்து மதத்தின் தத்துவத்தை அறியாத, அழிக்க முயல் கின்ற சிலர்தான், இந்துமதத்திற்கு இஸ்லாம் பகையானது” என்று பாறைசாற்றுகின்றனர். அவர்களின் அக்கூற்றை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு பதிலுரைப்பதென்றால், முதலில் எழுகின்ற கேள்வி இஸ்லாம், இந்து மதத்தின் உண்மையான தத்துவத்திற்கு மாறுபட்டதா? அல்லது இந்துமதத்தில் காலக் கிரமத்தே தோன்றிவிட்ட சில பழக்க வழக்கங்களுக்கு மாறு பட்டிருக்கின்றதா? என்பதற்கு என்பதற்கு அவர்கள் பதில் தந்தாக வேண்டும்.
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/11
Appearance