இஸ்லாம் இந்து மதத்திற்கு வீரோதமானதா? உலகிலுள்ள எந்த மதத்திற்கும் (சமயத்திற்கும்) இஸ்லாமியச் சமயம் விரோதமானதன்று. இது நபிகள் நாயகம் (சல்) அவர்களின் நல்லுரை மட்டுமின்றி திருக்குர் ஆனின் கருத்துமாகும். பொதுவாக பல பாட்டைகள் ஒரு நகரத்தைச் சென் றடைவது போன்றதே சமயங்கள் அனைத்தும் என்பது, இந்தியத் தத்துவம். இந்தத் தத்துவப்படி உலகத்தில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் ஒரு கொள்கையின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும்! இயங்க வேண்டும்! அப்படித்தான் - அடிப்படை எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாக அமைந்திருக்கிறதென்பதை எவரும் மறுப்பதற் கில்லை. இதனை நாம் விளங்கிக் கொள்வதற்கு சமயங்கள் தோறும் சென்று ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டுமென்ற அவசிய மில்லை. உலகிலுள்ள சமயங்களை, கடவுளை ஏற்றுக் கொண்டுள்ள சமயங்களென்றும், கடவுளை ஏற்க மறுக்கின்ற சமயங்களென்றும் இரு பகுப்பாகப் பகுக்கலாம்.
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/10
Appearance