பாயிரம் “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!" இது மகாகவி பாரதியின் விடுதலைப் பாட்டு. இன்று சில சுய நலமிகள், இந்த மா கவிஞனின் வாக்கியத்தை, விடுதலை வீரர்களின் வாய் முழக்கமிட்ட தேசிய எழுச்சி வாசகத்தை மாற்றிப் பாடத் தொடங்கியுள்ளனர். . ஆம், இந்து முஸ்லிம் ஒன்று பட்டால் உண்டு தாழ்வு! இந்த ஒற்றுமை நீங்கின் நமக்கு நல் வாழ்வே! எனக் குரல் கொடுக்க முனைந்து விட்டனர். இந்தத் தீய ஒலியால் தேசம் மீண்டும் அன்னியனுக்கு அடிமைப்படும் என்பதை உணர்ந்துள்ள தேசியப் போராட்டத் தலைவர்கள்' கூட கண்டிக்க அஞ்சுகின்றனர். அஞ்சுகின்றனர். மீண்டும் தேசத்தை அடிமைப் படுத்தும் செயலைச் செய்யாதீர்கள் எனத் தடுத்திடாதுள்ளனர். 'த நான் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களினிடையே கடைசித் தொண்டன். 'இந்து முஸ்லிம் ஒன்றுபடுக" என முழக்கமிட்டவன். என்னால் நாட்டை அடிமைப்படுத்துகின்ற நாசக் குரல் ஒலிப்பதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்திட இயலவில்லை. எனவே, நமக்குள் 'பிளவு உண்டாக்கும் வேலை யாரால் எப்பொழுது ஆரம்பமாயிற்று. அதனால் நாமும் நாடும் அடைந்த துன்பம் என்ன? என்பதை இக்கால இளைஞர்களின் மனத்திலே பதிய வைத்திட இச் சிறு நூலை யாத்துள்ளேன். காந்திஜீயை நேருஜீயை வாயால் வாழ்த்திப் பயன் இல்லை. அவர்கள் எண்ணத்தைச் செயல்படுத்த செயல்படுத்த இந்து முஸ்லிம் ஒற்றுமை இன்றும் வேண்டும், இனியும் வேண்டும், என்றும் வேண்டும். இந்த எண்ணத்துடன் 'இந்து முஸ்லிம் பகைமை தோற்றுவிக்கப்பட்ட வாலாற்றைச் சான்றுகளுடன் தொட்டுக் காட்டியுள்ளேன். இன்னும் விரிவாக எழுதிட வேண்டும். நம் நாட்டு இளைஞர்கட்கு தேசம் மீட்கப்பட்ட வரலாறு தெரிந்தால் மட்டும் போதாது. நாட்டை அடிமைப்படுத்திட உதவிய ஆயுதம், எதிரி பயன்படுத்திய கருவி எது என்பதும் தெரிந் திருக்க வேண்டும். இந்த எனது எண்ணமே இந்நூல் தோன்றிடக் காரணம். நூலிற்கு அரிய முன்னுரை வழங்கிய ஆலிஜனாப் மௌலவி எம். அப்துல் வஹ்ஹாப் (பிறை ஆசிரியர்) அவர்கட்கும் இதனை 'இஸ்மி' மாத இதழில் தொடர் கட்டுரையாக வெளியிட்ட அதன் ஆசிரியர் கவிஞர் . இ. பதுருத்தீன் அவர்களுக்கும் நன்றி. - - கவி. காமு ஷெரீப்
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/9
Appearance