நிலைத்திருக்கக் கூடியதல்ல. இஸ்லாத்துக்கு வாளும் தேவை யல்ல, வன்முறையும் தேவையல்ல! "இஸ்லாம் இந்த உலகில் பரவி வருகிறது. எளிமை யான முறையில் அது மனித சகோதரத்துவத்தைப் பிரச் சாரம் செய்து, அதன்படிச் செயலாற்றி வாழும்போது. அது பரவித்தான் தீரும்! அதன் ஈர்ப்பு சக்தியை மறுத்திட முடியாது. அது பெற்றுள்ள வெற்றியே அதற்குச் சான்று கூறும். இவ்வாறு எழுதியவர். பேராசிரியரும் பேரா ராய்ச்சியாளருமான பகவன் தாஸ் அவர்களின் திருமகனாரும், சென்னையின் ஆளுநராக இருந்தவருமான ஸ்ரீ பிரகாசா. இவ்வாறு அவர் எழுதியதோ, கூறியதோ முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவதற்காக, அவர்கள் மத்தியில் அல்ல! " ஆர்கனைஸர் (ORGANISER) பத்திரிகையின் தீபாவளி சிறப்பு இதழில் 1968 ம் ஆண்டு அவர் எழுதியது இது! (பக்: 14) எனவே உலகம் உண்மையை அறிந்துவருகிறது. பொய்ம் மையின் பனிமூட்டம் கலைந்து, சத்தியத்தின் பேரொளி பர வித் தீரும். சத்தியத் திருமறை இப்பேருண்மையை வலியுறுத் திக் கூறுகின்றது. அந்தப் பனி மூட்டத்தைச் சிறிது கலைத்து, உண்மை ஒளிக்கீற்றாக இலங்கும் கலைமாமணியவர்களின் நூலைப் பெரிதும் வரவேற்கிறேன். தங்களிடமிருக்கும் இன் னும் ஏராளமான ஆதாரங்களைக் கொண்டு, இந்த ஆய்வை மேலும் விசாலப்படுத்தி எழுத அவர்கள் நாட்டம் கொண் டுள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் அவர்கள் மேலான எண் ணம் சிறந்து வெற்றிபெற்றிட வல்ல நாயனிடம் பணிந்து துஆக் கேட்கின்றேன். வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். 15-5-1405 6-2-1985 15. லெப்பை தெரு ஆலந்தூர் சென்னை - 600 016 அன்பன் அப்துல் வஹ்ஹாப் ஆசிரியர் "பிறை'
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/8
Appearance