நேசபாவத்தோடு இருக்கக்கூடாது என ஆங்கில என எண்ணிற்று. அதற்கு என்ன செய்யலாம்? அரசு தொன்மையான ஒரு நூல் என்னிடம் இருக்கின்றது. 'இந்தியா யாவின் ஆட்சி என்னும் அந்த நூல் 1833 ம் ஆண்டு- அதாவது பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் நேரடி நிர் வாகத்தைக் கைப்பற்றுவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர்- கம்பெனியாரின் செயலாளரான ஸர் ஜான் மால்கம் என்ப வரால் எழுதப்பெற்றது. அந்த நூலில் அவர் குறிப்பிடுகிறார்: “THA EMPIRE HAS BEEN ACQUIRED, AND MUST BE MAINTAINED, BY THE SWORD" [இந்த (இந்தியப்) பேரரசு வாளாலே அடையப்பெற்றது, அது வாளாலேயே நிர்வகிக்கப்படும்." அனுபந்தம் E, பக்கம் 187] ஆனால் வாளின் சாகசம் வளர்ந்தெழுந்த -இந்து-முஸ் லிம் இணைந்து பெற்றிருந்த - தேசீய உணர்வை அழிக்க ஆற் றல் பெறாது போயிற்று. 1806 ம் ஆண்டில், முதல் தேசீய விடுதலைப் போர் வேலூரில் வெடித்தது. வேலூர்க் கோட் டையில் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, ஷஹீது திப்பு சுலதான் வீர மரணத்தைத் தழுவும்போதும் வெற்றிச் சின்னமாக வைத்திருந்ததும், "அல்-ஃபத்தாஹ்" - இறை வனே வெற்றியானன்-என்னும் இறைவனின் திருநாமத் தைப் பொறித்திருந்ததுமான விடுதலைக் கொடியை ஏற்றி னர் இந்து-முஸ்லிம் தேசீய வீரர்கள். பட்டொளி வீசிப் பறந்த அப்பதாகை பரங்கியரைப் பதைபதைக்கச் செய்தது! அடுத்து, ஐம்பதாண்டுகளுக்குப் பின் 1857 ம் ஆண்டில் கொதித்தெழுந்த தேசீயப் போரின் போது, மன்னர் பஹாதுர்ஷாஜஃபரையே தங்கள் தானைத் தலைவராக இருக்கு மாறு வேண்டிக்கொண்டார்கள் இந்து-முஸ்லிம் பெருங்குடி மக்கள். ஆக, வாள் இந்து முஸ்லிம்களைப் பிரிக்காது என்று கண்டு கொண்ட வன்கணாளர்கள், பேனாவைத் தூக்கினர். அதன் விளைவாகத்தான் இரத்தக் கறையை மறந்து, சோகக் கறையை, நச்சுக் கறையைத் தோய்க்கும் வர லாறுகளை எழுதத் துவங்கினர் வெள்ளையரும். அவர்தம் கூலிப் படையினரும்! அவர்கள் எழுத்துகளில் உண்மைக்கே தரித்திரமேற்பட்டுப் போனமையினால் அவர்களைச் சரித் திராசிரியர்கள் என்று சொல்வதைவிட தரித்திராசிரியர்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் பொய்யைத் தொழுதடிமை செய்து சரித் திரத்தைப் புரட்டிய இப்புன்மதியாளரின் சூழ்ச்சி என்றும்
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/7
Appearance