உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு பிறறைப் பகைக்கவோ, அவர்களுக்கு உத விடாது இருக்கவோ இஸ்லாம் போதிக்கவில்லை என்று அல் குர்ஆனும், அற நூல்களும், அழகிய வரலாறுகளும் இன் றும் என்றும் சான்று கூற இருக்கும்போது, முஸ்லிம்கள் கொடுமையாளர்கள், ஊரை அழித்தார்கள், கோவிலை இடித் தார்கள் என்ற கட்டுக் கதைகள் எப்பொழுது கற்பனை செய்யப் பெற்றுச் செலாவணியில் விடப்பட்டன என்பதை ஆய்ந்துணர்த்துவதையே தம் பணியாகக் கொண்டு, இந் நூலைத் தந்துள்னார்கள் ஆசிரியப் பெருமகனார். இந்து முஸ்லிம் ஒற்றுமையைக் கண்ட வெள்ளையன் இந்த ஒற்றுமை சிதைந்தால் ஒழிய இந்த நாட்டினை நாம் ஆளமுடி யாது என உணர்ந்தான். இந்து முஸ்லிம்களிடையே பகைப்பு எண்ணம் வளர்ந்திடும் வகையில் வரலாற்றினை எழுதிட லானான். இன்று நம்மிடையே உள்ள நம் வரலாறுகளெல் லாம் வெள்ளையன் எழுதியவை அல்லது அவற்றை ஆதார மாகக் கொண்டு எழுதப்பட்டவை தானே! இன்று வெள்ளையன் போய்விட்டான். ஆனாலும் அவன் வைத்த தீ - இந்து முஸ்லிம் பகை நெருப்பு - அணையவில்லை.. (பக்: 25) என்று ஆசிரியர் கூறுவது மிகைச் சொல்லுமல்ல. கற்பனையுமல்ல; தக்க வரலாற்று ஆதாரங்களைக் கொண்ட பேருண்மையாகும். இங்கிலாந்தின் முதலாம் எலிஸபெத் அரசி கிழக்கிந்தியக் கம்பெனி ஒன்று நிறுவுவதற்குரிய சாசனம் வழங்கினார். இ கம்பெனியைச் சார்ந்தோரையே கும்பினியார் என்று தமிழக வரலாறும் கூறுகிறது. கி.பி. 1600-ம் ஆண்டு இவ் வாறு தோன்றிய கிழக்கிந்திய கம்பெனியார் 1613-ம் ஆண்டில் ஸூரத்தில் ஒரு தொழிற்சாலையை நிறுவினர். 1662-ம் வருடத்தில் பம்பாயைத் தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். பிரெஞ்சு ஆளுநரான டூப்ளே, ஆங்கி லேயரின் செல்வாக்கை அழிக்க முயன்றார். ஆனால் கிளைவ் அச்செல்வாக்கை வேரூன்றச் செய்வதில் வெற்றி கண்டார். பிட் பிரிட்டிஷ் பிரதமரான போது, ஒரு தனிச்சட்டமியற்றி கம்பெனியின் நிர்வாகத்தை மேற்பார்க்க அமைப்பொன்றை 1784 ம் ஆண்டு நிறுவினார். ஆனால் 1857 ம் ஆண்டு கிளர்ந் தெழுந்த தேசீயப் போராட்டத்தின் விளைவாக கம்பெனி ஆதிக்கத்தை அகற்றி, பிரிட்டிஷ் அரசே இந்தியாவை நேரடி யாக நிர்வகிக்கத் தொடங்கிற்று. தம் ஏகபோக ஆட்சிக்கு பாதகம் ஏற்படாதிருக்க வேண்டு மானால், இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவரோடொருவர்