4 ஆக, மனிதர்கள் அனைவரையும்-- அவர்கள் இந்துக்களா. யினும், கிறித்தவர்களாயினும், சமணர்களாயினும், நாத்தி கர்களாயினும்--படைத்தவன் ஒரே இறைவன்தான். அவ் வாறு இருக்கும்போது அறச் சமயம் ஒன்று பிறரிடம் விரோ தம் பாராட்டச் சொல்லாது; சொல்லக்கூடாது. இதைத் தான் இன்னிசைக் கவிஞர் அல்லாமா முஹம்மது இக்பால் (ரஹ்) ஆணித்தரமாக: "மஸ்ஹப் நஹீ(ன்) ஸிக்காதா ஆபஸ் மே பைர் ரக்னா - ஒருவருக்கொருவர் விரோதம் பாராட்டிக் கொள்ளவும், பகைவராகவும் இருக்கவும் மதம் போதிப்பதில்லை-அதாவது இஸ்லாம் அவ்வாறு விரோதம் கொள்வதை ஏற்பதில்லை, என்று கருத்துச் செறிய ஒரு கவிதையில் கூறுகிறார். மேலும் அவர் கூறுகிறார்: நாத்திகர்களையும் விரோதங் கொண்டு செயல்படாதீர்கள். ஏனெனில் லா இலாஹ இல்லல்லாஹ்-இறைவன் இல்லை - ஏக றைவனான அல்லாஹ்வைத் தவிர" என்ற திருமந்திரத்தின் முதற் பகு தியை அவர்கள் இப்பொழுது ஓத ஆரம்பித்திருக்கிறார்கள்!” என்று கூறுகிறார். அவர்கள் பிற்பகுதியையும் ஓதி, உணர்ந்து செயல்படுவது, அத்திருமந்திரத்தை ஏற்கெனவே ஓதி வரு வோரின் நடத்தையைப் பொறுத்தது என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு கூறுகின்றார். அல் குர் ஆனின் திருவசனங்கள் இரண்டை மேலே படித் தீர்கள். பிறர் வணங்கும் தெய்வங்களைப் பழிக்காதீர் கள், " 'அவர்களின் வணக்கத் தலங்களை, அவற்றை அழிக்க முற்படுவோரிடமிருந்து, அல்லாஹ்வே தடுத்துக் காக்கிறான்," என்ற அறிவுரைகளை இத் திருவசனங்களில் அல்லாஹு தஆலா வழங்குகிறான் "அண்டை வீட்டுக்காரன் 'பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவன், என்னைச் சார்ந்தவன் அல்லன்." என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியபோது அண்டை வீட் டார் யாராக இருந்தாலுமா?' என்று அன்னை ஆயிஷா நாச்சியார் வினவினார்கள். யூதராக இருந்தாலும் சரியே?" என்று இறைவனின் திருத்தூதர் பதிலளித்தார் கள். .. "உங்களிடம் விருந்தினர் வந்தால் அவர்களை உளமார உபசரித்து ஆவன செய்யுங்கள் - அவர்கள் காபிர்களாக இருந்தாலும் சரியே!" என்றும் உத்தமத் திருநபி உரைத் துள்ளார்கள்.
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/5
Appearance