உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் நஹ்மதுஹு வ நுஸல்லி அலாரஸூலிஹில் கரீம் "அல்லாஹ் அல்லாத எவற்றைப் (பிற மனி தர்கள் ஆண்டவர்களென) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். (6: 108) ........மனிதர்களில் சிலரைக் கொண்டு சிலரை அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும், கிறிஸ் தவர்கள் வணங்குந்தலங்களும், யூதர்களின் ஆல யங்களும், அல்லாஹ்வின் திருநாமம் அதிகமதிகம் தியானிக்கப் பெறும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டுப் போயிருக்கும்...... (22:40)

நாடறிந்த நாவலரும், நல்ல தமிழ்க் காவலரும், சீறா வின் செப்பரிய விரிவுரையாளரும், பன்னூலாசிரியரும், ஆய்வாளருமான கலைமாமணி இஸ்லாம் இந்து மதத் திற்கு விரோதமானதா?" என்னும், அளவில் சிறிதும், ஆழிய, கருத்தோட்டத்தில் மிக விசாலமானதுமான ஓர் அரிய தூலை யாத்துத் தந்துள்ளார்கள். இந்நூலைக் காய் தல் உவத்தலின்றி சிந்தித்துப் படிக்கும் நேர்மையுள்ளம் கொண்ட எவரும், இஸ்லாம் இந்து மதத்துக்கு மட்டுமின்றி. வேறு எந்த மதத்துக்கும்--ஏன் நாத்திகத்துக்கும்கூட- அவற்றை வன்முறையாலோ. அடாத செயல்களாலோ அழிக்க முற்படும் விரோதியல்ல என்பதை உணர்வர். உலகப் படைப்புகள் அனைத்தையும்-மக்கள் அவர்கள் எச்சமயத்தைச் சார்ந்தோராயினும், அவர்கள் எம்மொழி யைப் பேசினாலும், எந்நாட்டவரானாலும், என்ன நிறத்தவரா னாலும், எந்த இனத்தவராயினும் அவர்கள் அனைவரையும் படைத்துக் காப்பவன் ஏக இறைவனான அல்லாஹ்தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவமும், போதனையு மாகும். தித்திக்கும் திருமறையின் முதல் திருவசனமே இவ் வுண்மையை உலகறிய உரைக்கிறது; அனைத்துப் புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து, வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே யாகும். (திருக்குர்ஆன் அத்தியாயம் 1, திரு வசனம்.1)