யின் கின்றார். 16 அடிப்படையைக் கொண்டேதான் பரவிற்று" என் காந்தி அடிகளின் நண்பர்களில் ஒருவரும், வரலாற்றாசிரி யருமான சுந்தர்லால் கூற்றேயன்றி நம்மைச் சுற்றியுள்ள நாடு களை உற்று நோக்கினால் இஸ்லாம் வாள்கொண்டு பரப்பப் பட்ட மார்க்கம் அன்று என்பது விளங்கும். உதாரணமாக. அது இந்து மாகடல் பகுதியில் உள்ள தீவுகளில் ஒன்று மால் தீவு என்பது. இச்சிறிய தீவு, இந்தியா-இலங்கையையொப்ப வெள்ளையன் கீழ் அடிமைப்பட்டிருந்தது. இன்று சுதந்திர நாடு. சின்ன அந்தத் தீவின் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேலில்லை. இத் தீவின் மக்கள் அனைவரும் முஸ்லீம்களே. இவர்கள் வேறு எங்கிருந்தும் குடியேறியவர் களோ. குடியேற்றப்பட்டவர்களோ அல்லர். அனைவரும் அந்தத் தீவின் பூர்வீகக் குடிமக்களே. இவர்கள் ஆதியில் முஸ்லிமாக இல்லாதிருந்து பின்னர் முஸ்லிமாக ஆனார்கள் என்பதே இவர்கள் வரலாறு. இவர்களை எந்த சுல்தான் (முஸ்லிம் அரசன்) வாள்கொண்டு இஸ்லாத்தில் ஆக்கினான்? ஈராக் நாட்டில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாஞானியும்,ஞானிகளின் வேந்தருமான முகையிதீன் அப்துல் காதர் ஜீலானி என்ற, சூபிகளின் தலைவர் வருகையின் பேரில் இவர்கள், அதாவது மால்தீவு என்கின்ற 'மஹல்ல தீவு' மக்கள் அனைவரும் இஸ்லாத்தில் ஆயினர் என்பது வழக்காறு. முரோக்கோ நாட்டினரான அபுல்பரக்கத்து பெர்பெரி எனும் ஞானியரால்தான் இஸ்லாம் அங்கு பரவிற்றென்றும் உரைப்பர். மால்தீவை யொட்டியுள்ள நாடு ஸ்ரீலங்கா என்னும் இலங்கை. இங்கே வாழுகின்ற மக்களில் எட்டுச் சதவிகிதத் தினர் முஸ்லீம் என்று சொல்லத்தக்க வகையில் அங்கே முஸ்லிம்கள் வாழுகின்றனர். இவர்கள் வெளி நாடுகளிலி ருந்து குடியேறியவர்கள் அன்று. யாழ்ப்பாணத் தமிழர்களைப் போன்று இவர்களும் இலங்கையின் பூர்வீகக் குடியினரே,
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/25
Appearance