17. தாய்மொழியும் கூடத் தமிழ்தான் இவர்கட்கும். எந்த சுல்தான் (முஸ்லிம் வேந்தன்) அங்கு சென்றான்? வாள் கொண்டு வெள்றான்? இஸ்லாத்தை இலங்கையில் பரப்பினான்? இலங்கையின் மீது எந்த முஸ்லிம் மன்னனும் படை நடத்திச் சென்றதாக வரலாறில்லையே! அங்கே இஸ்லாம் பரவியுளதே? எப்படி? இலங்கையில் மட்டிலும் அன்றி, மலேசிய நாடு முழுவ திலும் உள்ள பூர்வீகக் குடிகள் அனைவரும் முஸ்லிம்களே. இவர்களின் எண்ணிக்கை அண்மைக் கணக்கின்படி ஒருகோடி என்றறிய முடிகிறது. இந்த மலேயா நாட்டின் மீது ராஜேந் திரச் சோழன் வரை தமிழ்மன்னர்கள் படையெடுத்துச் சென்ற தாக வரலாறுண்டு. ஆனால் எந்த ஒரு முஸ்லிம் சுல்தானோ பாதுஷாவோ (மாமன்னன்) மலேசியா மீது படைகொண்டே கியதாக வரலாறில்லை. அவ்வாறிருந்தும் மலேசியா நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் அனைவருமே முஸ்லிம்களாக உள்ளனரே அது எப்படி? வாள்கொண்டுதான் இஸ்லாம் பரப்பப்பட்ட தென விள்ளுகின்ற கனவான்கள் இதில் கவனம் செலுத்தினார் களா? செலுத்துவார்களா?... மலேசியாவை அடுத்துள்ள நாடு இந்தோனீஷியா. ஜாகர்தாவைத் தலைநகராகக் கொண்ட இந்த நாடு. ஜாவா விலிருந்து பல தீவுகளால், தீவுக்கூட்டங்களால் ஆனவை. இதன் பூர்வீகக் குடிகள் அனைவரும் முஸ்லிம்களே! ஒரு காலத் தில் இத்தீவுகளில் இந்து சமயம் பரவி இருந்ததென்பர். இந்தோனீஷியாவின் அடிமைத் தளையை அறுத்தெறிந்தவர் டாக்டர் சுகர்னோ இவர் முஸ்லிம். இவருடைய பெயர் 'கர்ணன்' என்ற பெயரில் இருந்து திரிந்து ஆனது என்று இந்து சமய ஆய்வரளர்கள் உரைக்கின்றனர். இவர்களின் கூற்றின்படி ஒரு காலத்தில் இந்து சயயத்தினர்களாக வகழ்ந்த இந்தோனீஷியர் அனைவரும் இஸ்லாமியர்கள் ஆனது எப்படி? யாரால்? இங்கேயும் வாளைத் தூக்கிக் கொண்டு
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/26
Appearance