உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 முஸ்லிம் மன்னர்கள் நுழைந்தார்களா? அவ்வாறாயின் அந்த முஸ்லிம் மன்னர் யார்? எந்த நாட்டினர்? பெயர் யாது? உண்மை இதுதான். மேற்கு ஆசியாவில் அராபியாவில் தோன்றிய இஸ்லாம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத் திலேயே அவர்கள் தம் தோழர்களால் மத்திய ஆசியாவிலும் கிழக்கு ஆசியாவிலும் தூர கிழக்கு ஆசியாவிலும் கூட பரவத் தொடங்கிற்று. அந்த நபித் தோழர்கள் வாணிகர்களாக இருந்ததினால் அவர்கள் வணிகம் புரிந்த நாடுகளிலெல்லாம் இஸ்லாம் சென்று பரப்புவாரின்றியே அதனுடைய மேம்பாட் டின் காரணமாகத் தானாகவே பரவலாயிற்று. இந்த அரபி இஸ்லாமிய வணிகர்களுடன் சென்ற ஞானவான்களான சூபி களாலும் அவர்கள் தம் அன்பு, பண்பு, அடக்கம், ஈகை, இரக்கம், நோய் நீக்கல், தொழுகை, நோன்பு நோற்றல் போன்ற நன்னடத்தைகளே பிரச்சார சாதனங்களாகவும், அமைந்து இஸ்லாத்தைப் பரப்பியுள்ளன என்பதே உண்மை. இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால், சுமார் ஆயிரத்திருநூறு ஆண்டுகட்கு முன்னே அறிமுகமாகி எண் ணூறு ஆண்டுகட்கு மேலாக (இஸ்லாமிய மன்னர்களால்) ஆளப்பட்டு வந்த இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையின ராகவே உள்ளனர். ஆனால், எந்த ஒரு முஸ்லிம் மன்னனின் காலடியும் படாத மால்தீவு, மலேயா, இந்தோனீஷியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் முழுக்க முழுக்க முஸ்லிமாக உள்ளனர். இதுமட்டுமின்றி மேலே சொன்ன நாடுகளின் தாய் மொழிக் கான (லிபி) எழுத்துக்கள் முழுமையாக அரபி எழுத்துக் களாகவே உள்ளன. இந்தியாவில் இந்த நிலை இல்லையே, ஏன்? வாள்கொண்டு இஸ்லாம் பரப்பப் பட்டதாகக் கூறப்படு கின்ற இந்தியாவில் உருதும் பஞ்சாபியும் இந்துஸ்தானியும் மட்டுமே அரபி லிபியைக் கொண்டிருக்கும் போது, இஸ்லாமிய மன்னர்களின் கால் படாப் பூமியாகிய மால் தீவு.